Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கூட்டணியில் ராமதாஸ் பாமக.. விசிக ஏற்குமா?.. வன்னி அரசு நச் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வியூகங்களில் பரபரப்பாக உள்ளனர். பாமகவில் தந்தை மகன் பனிப்போர் வெடித்து கொண்டிருக்கிறது. ராமதாஸ், அன்புமணி இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவுகிறது. இதன் காரணமாக பாமகவில் பிளவு ஏற்பட்டு, ராமதாஸ், அன்புமணி தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விசிக ஏற்றுக் கொள்ளுமா என்பதற்கு அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி வன்னி அரசு பதில் அளித்துள்ளார்.

பாமகவில் உள்கட்சி பிரச்சனை பூதாகரமாக வெடித்து வருகிறது. ராமதாஸ் - அன்புமணி இடையே அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், பிரச்சனைகளை விரைவில் முடித்து கூட்டணி நிலைப்பாட்டி இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாமக உள்ளது. இதேபோல அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியும் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

will-vck-accept-pmk-in-dmk-alliance-vanni-arasu-replied

பாமக பஞ்சாயத்து

அன்புமணி கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக இரண்டு பேரும் கூட்டாக அறிவித்தனர். மறுபக்கம் ராமதாஸ் தரப்பில் 2026 தேர்தலுக்கு விருப்ப மனு கொடுக்கும் நிகழ்வு தொடங்கியுள்ளது. திமுக ஆட்சி நன்றாக இருக்கிறது என்றும் ராமதாஸ் பாராட்டியுள்ளார். அன்புமணி அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்திருப்பதால், ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் உள்ளனர். அவர்கள் பாமகவை ஏற்பார்களா என்கிற சந்தேகம் நிலவுகிறது. இதுகுறித்து விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், "மதவாத பாஜகவுடனும், சாதியவாத பாமகவுடனும் கூட்டணி இல்லை, ஒட்டு உறவு இல்லை என்பதை எங்கள் எழுச்சி தமிழர் திருமாவளவன் பலமுறை தெளிவாக சொல்லியுள்ளார். இன்றைக்கு பாமக தனித்தனியாக பிரிந்துள்ளது. ஒருவர் அதிமுக பக்கம் சென்றுவிட்டார்.

பாமகவை ஏற்குமா விசிக

இன்னொருவர் இங்கு வருவதாக சொல்கிறார்கள். எல்லாமே யூகங்கள் தான். அதற்கு தற்போது பதில் சொல்ல முடியாது. எல்லாவற்றுக்கும் எங்கள் தலைவர் தான் முடிவு செய்வார். எங்கள் நிலைப்பாடு குறித்து தலைவர் அறிவிப்பார். பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதத்தில் இரண்டு முறை தமிழ்நாடு வர திட்டமிட்டுள்ளார். அவர் கடந்த 2014 ஆம் வருடத்தில் இருந்தே தமிழ்நாடு வந்து கொண்டு தான் இருக்கிறார். அப்போது மோடி அலை என்று சொல்லித்தான் ஆரம்பித்தார்கள். அதுவே இங்கு எடுபடவில்லை.

வட மாநில அரசியல் போலத்தான் தமிழ்நாடு அரசியல் என்று நினைத்து இங்கு வந்தார்கள். திருப்பரங்குன்றம் போன்ற பிரச்சனைகளை மையப்படுத்தி மத ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்திட்டத்தை உருவாக்குகின்றனர். அந்த அரசியல் ஒருபோதும் தமிழ்நாட்டில் எடுபடாது. மோடி போன்றவர்கள் ஒருமுறை, இரண்டு முறை அல்ல அவர் தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் கூட அவர்களின் திட்டம் நிறைவேறாது.

பாஜக வெற்றி பெறாது

இது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் கருத்தியலை ஏற்று கொண்ட மண். அவர்கள் தமிழ்நாட்டிற்கு எதிரான அரசியலை முன்னெடுக்கிறார்கள். நாட்டிலேயே டெல்லிக்கும், தமிழ்நாட்டிற்குமான போராட்டம் தான் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. சமூக நீதி அரசியலுக்கும், அவர்கள் முன்னெடுக்கும் இந்துத்துவ அரசியலுக்கும் தான் போட்டியே. இந்த போட்டியில் அவர்கள் மண்ணை கவ்வி செல்வார்களே தவிர வெற்றி பெற முடியாது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+