Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"யூ டர்ன்?".. வீழ்கிறதா இன்னொரு விக்கெட்?.. எடப்பாடி பழனிசாமியை தவிர்த்த புள்ளி.. என்னவா இருக்கும்?

வெல்லமண்டி நடராஜன் சசிகலாவிடம் தாவ போகிறாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது என்ற கூற்று அதிமுகவில் வலுவாக எழுந்து வரும் நிலையில், திடீரென ஒரு மாஜியின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக மாஜிக்களில் அடிக்கடி சலசலப்புக்கு உள்ளாகுபவர் வெல்லமண்டி நடராஜன்.. அதிமுகவின் திருச்சியின் மொத்த பலமே இந்த சீனியர் தலைவர்தான்..!

எனினும் உட்கட்சி பூசல் திருச்சியில் அடிக்கடி ஏற்பட்டு கொண்டே இருக்கும்.. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இந்தத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் தோல்வி என்பது எதிர்பார்த்ததுதான்.. ஆனால், நேரு வெற்றிபெறுவதற்கு சிவப்புக் கம்பளம் விரித்தவர் வெல்லமண்டி என்று வெளிப்படையாகப் பேசியிருந்தனர் அதிமுகவினர்.

திருச்சி

திருச்சி

அதற்கு காரணம், பலம் பொருந்திய திமுகவின் நேருவை எதிர்க்க, சட்டமன்றத் தேர்தலில் முன் அனுபவம் இல்லாத பத்மநாபன் என்பவர் நிறுத்தப்பட்டிருந்தார்.. திருச்சியில் தன்னை தாண்டி யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக நேருவுடன் டீல் போட்டுக்கொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், டம்மியான வேட்பாளர் பத்மநாபனை நிறுத்தியிருக்கிறார் என்றெல்லாம்கூட அப்போது தகவல்கள் கசிந்தன. இதற்கு பிறகு உள்ளாட்சி தேர்தலிலும் திருச்சியில் அதிமுக மண்ணை கவ்வியது.

 மகன் தோல்வி

மகன் தோல்வி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 20-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேருவும் போட்டியிட்டார்.. அதுவும் திருச்சியின் மேயர் பதவியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்றும் கனவில் இருந்தார்.. அதற்காகவே கடுமையாக முயற்சி செய்தார்.. கடைசியில ஒரு சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் மகன்.. முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகன், சுயேச்சை வேட்பாளரிடத்தில் தோல்வியடைந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில், குறிப்பாக திருச்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 நேரில் சந்திப்பு

நேரில் சந்திப்பு

இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு விஷயம் கசிந்து கொண்டிருக்கிறது.. திருச்சி மாநகராட்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் , திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமாருடன், எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதேபோல, மாஜி அமைச்சர் பரஞ்சோதியும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஆனால் வெல்லமண்டி நடராஜன் மட்டும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க போகவே இல்லையாம். இவர் ஏன் எடப்பாடியை சந்திக்கவில்லை என்பதே இப்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.. ஏற்கனவே அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடி கொண்டிருக்கும் நேரத்தில், அதுவும் சசிகலா கட்சிக்குள் வருவாரா? மாட்டாரா? என்ற சலசலப்புகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், வெல்லமண்டி நடராஜன் எடப்பாடியை நேரில் சந்திக்காதது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா

சசிகலா

இத்தனை நாளும் சசிகலா பற்றி விமர்சித்து கொண்டிருந்த ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம் போன்றோர், கடந்த சில நாட்களாகவே சசிகலா பற்றி வாய் திறக்காமல் அமைதி காத்து கொண்டிருப்பதே எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை தந்து வரும் நிலையில், வெல்லமண்டியின் ஆப்சென்ட் கவனிக்கத்தக்கதாக உள்ளது.. ஒருவேளை மாற்று கட்சிக்கு அதாவது சசிகலா பக்கம் வெல்லமண்டி தாவ போகிறாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை..

விளக்கம்

விளக்கம்

இதை பற்றி திருச்சி அதிமுக வட்டாரத்தில் சொல்லும்போது, இந்த உள்ளாட்சித் தேர்தலில்இவர் மூலம் நிறைய பேருக்கு சீட்டு கிடைத்தது.. ஆனால், அத்தனை வேட்பாளர்களும் தோல்வியை தழுவிவிட்டனர்.. எடப்பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்கள்.. வெல்லமண்டி தரப்பில் யாரும் வெற்றிபெறாததால், அந்த தர்மசங்கடத்தை தவிர்க்ககூட முதல்வரை சந்திக்காமல் தவிர்த்திருக்கலாம்.. அதுமட்டுமல்ல, ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, திருச்சியில் ஆர்ப்பாட்டத்தை வெல்லமண்டி நடராஜன்தான் நடத்தினார். அதனால் வேறு கட்சிக்கு தாவுகிறார் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+