ஓபிஎஸ் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா? வந்து விழுந்த கேள்வி.. சசிகலா கொடுத்த பதில் இதுதான்
சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய அனைவரையும் நான் ஒருங்கிணைப்பேன். எல்லாருக்கும் புரிந்து கொள்வதற்கு ஒரு காலம் வரும் என்று சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார். அப்போது ஓபிஎஸ் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக சட்டப் போராட்டங்களை நடத்தி வரும் ஓ பன்னீர் செல்வம், வரும் 23 ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று ஓ பன்னீர் செல்வம் கூறி வருகிறார்.

இந்த நிலையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சசிகலா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டால் நிச்சயம் வழங்குவேன். மாநாட்டிற்கு அழைத்தால் அது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும். எல்லோருக்கும் புரிந்து கொள்ள ஒரு காலம் வரும். அந்த கால நேரம் வரும் போது எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.
நீங்கள் ஓபிஎஸ்சை மட்டும் சொல்கிறீர்கள் . நான் பொதுவான கருத்தை சொல்கிறேன். சிவில் கோர்ட்டின் முடிவு தெரியாமல் எந்த முடிவும் நிரந்தரம் இல்லை என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அதிமுகவில் குறிப்பிட்ட 3 பேரை தவிர யார் வேண்டும் என்றாலும் இணையலாம் என்று சொல்கிறார்கள் என்று கேட்கிறீர்கள். இது குறித்து தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும்.
ஏனென்றால் நான் எல்லாருக்கும் பொதுவான நபர். எனக்கு இது சொந்த ஊர் அது சொந்த ஊர் என்று நினைத்தது கிடையாது. ஜாதியிலும் அப்படி நினைத்தது கிடையது. அப்படி நினைத்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவரை நான் முதல்வராக கொண்டு வந்து இருக்க மாட்டேன். என்னுடைய வழி தனி வழியாகவே இருக்கும். நான் முதலிலில் இருந்தே அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் சொல்லி வருகிறேன்.
எம்.ஜி.ஆரை வெளியேற்றிய பிறகு உருவானதுதான் அதிமுக. அதிமுக ஆரம்பித்த பிறகு மக்கள் எப்படி பயன்பெற்றார்கள் என்று தான் பார்க்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவும் அதை செய்து வந்தார். அதன் பிறகு நானும் அதெ முயற்சியில் இருக்கிறேன். அரசியல் கட்சி.. அதைத்தாண்டி நான் நினைப்பேன். தமிழ்நாட்டிற்கு ஒரு நல்லதை செய்ய வேண்டும் என்றால் அதிமுக இருந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் தப்பானவர்களுக்கு ஓட்டு போட்டு அவர்கள் தனியா ஒரு ரூட்டில் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அதிமுக உள்கட்சி பூசல் என்பதை திமுக எப்படி பயன்படுத்திறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். அதிமுகவில் அனைவரும் ஒன்று சேரக்கூடது என திமுக செயல்பட்டு வருகிறது. திமுக சட்டசபையிலே இரட்டை வேடம் போடுகிறது. கோடநாடு வழக்கை அரசியலுக்காக திமுக பயன்படுத்தி வருகிறது. கோடநாடு வழக்கு இப்போதைக்கு முடியாது. அதிமுகவில் இருந்து விலகிய அனைவரையும் நான் ஒருங்கிணைப்பேன்.












Click it and Unblock the Notifications