தென் மாநிலங்களில் பறவை காய்ச்சல்! சிக்கன் சாப்பிடலாமா? முட்டை பாதுகாப்பானதா? டாக்டர்கள் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில வாரங்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பறவை காய்ச்சல் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் பல லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. இதனால் நாம் சிக்கன் அல்லது முட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதற்கு மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நமது நாட்டில் அவ்வப்போது பறவை காய்ச்சல் என்பது மோசமான பிரச்சினையாக வெடிக்கும். அதன்படியே இப்போது தென்மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பறவை காய்ச்சல் என்பது பரவி வருகிறது.

Chicken bird flu

பறவை காய்ச்சல்

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் பறவை காய்ச்சல் காரணமாகக் கடந்த சில நாட்களில் சுமார் 2 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. அதேபோல தெலுங்கானாவில் பல இடங்களில் கோழிகள் கொத்து கொத்தாக உயிரிழக்கிறது. அதுவும் பறவை காய்ச்சலாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இப்படி பறவை காய்ச்சல் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில். நாம் சில அடிப்படை கேள்விகளுக்கு விடையைப் பார்க்கலாம். பறவை காய்ச்சல் குறித்து செய்திகளைப் படித்தால் நமக்கு எழும் முதல் கேள்வி, "சிக்கன் பாதுகாப்பானதா.. அதைச் சாப்பிடலாமா?" என்பது தான். பறவை காய்ச்சல் அச்சம் வந்தாலே சிக்கன் விலை கூட பல மடங்கு குறைந்துவிடும். இதனால் தான் எப்போதும் பறவை காய்ச்சல் வந்தவுடன் சிக்கன் சாப்பிடுவதையே கூட பலரும் தவிர்த்துவிடுவார்கள்.

சிக்கன் சாப்பிடலாமா?

ஆனால், வல்லுநர்கள் இதற்கு மாறான கருத்துகளையே கூறுகிறார்கள். அதாவது சிக்கனை முறையாகச் சமைத்துச் சாப்பிட்டால் அதன் மூலம் யாருக்கும் எந்தவொரு நோய் பாதிப்பும் பரவாதாம். பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் H5N1 வைரஸ் என்பது 70°C வெப்பத்தில் கொல்லப்படும். எனவே, நாம் முறையாகச் சமைத்துச் சாப்பிட்டால் சிக்கன் மூலம் பறவை காய்ச்சல் எல்லாம் பரவாது.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், "சரியாகச் சமைக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவதால் எந்தவொரு ஆபத்தும் இல்லை. சிக்கன் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் வரும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. நமது நாட்டில் பிரியாணி, சிக்கன் குழம்பு என எதுவாக இருந்தாலும் அதை 70 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடுபடுத்தியே சமைக்கிறார்கள். இதனால் வைரஸ் இருந்தாலும் கொல்லப்படும். யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் இல்லை" என்கிறார்கள். எனவே, முறையாகச் சமைத்த சிக்கன் பிரியாணியால் பறவை காய்ச்சல் எல்லாம் வராது

முட்டை பாதுகாப்பானதா?

சிக்கனுக்கு மட்டுமில்லை.. கோழி முட்டைக்கும் கூட அதே முறை தான். முட்டையை முறையாக வேக வைத்துச் சாப்பிடும் போது அது எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதேநேரம் ஆஃப் பாயில், ஒன் சைட் ஆம்லெட், கலக்கி என முழுதாக வைக வைக்கப்படாத முட்டை அல்லது பச்சை முட்டையைச் சாப்பிடும் போது அது உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கவே செய்கிறது. எனவே, அதைத் தவிர்ப்பது நல்லது.

நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளை சரியான முன்னெச்சரிக்கை இல்லாமல் கையாளும் போது மட்டுமே பறவைக் காய்ச்சல் ஆபத்தானதாக மாறுகிறது. எனவே, கோழி பண்ணை அருகே உள்ளவர்கள் மட்டுமே சற்று கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளை மட்டுமே குறிவைக்கும்.

மனிதர்களைத் தாக்குமா?

மிக அரிதான சூழலில் மட்டுமே அது மனிதர்களைத் தாக்கும். அதுவும் முன்பே கூறியது போல நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த பறவைகளை முறையாக அப்புறப்படுத்தவில்லை என்றால் மட்டுமே அது மனிதர்களைத் தாக்கும். மேலும், அது மனிதர்களுக்கு இடையே, அதாவது பறவை காய்ச்சல் ஒருவருக்கு ஏற்பட்டால் அது அவர் மூலம் மற்றவருக்குப் பரவுவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே, இப்போது இதை நினைத்து நாம கவலைப்படத் தேவையில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+