விண்டோஸ் சிஸ்டம்களுக்கு ஆபத்து.. ஹேக்கர்களால் அலறப்போகும் IT துறை.. தப்பிப்பது எப்படி?
சென்னை: நம் நாட்டில் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் விண்டோஸ் ஓஎஸ் பயன்படுத்துவோருக்கு ஹேக்கர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிற தளங்களான எக்ஸல், வேர்ட், பவர்பாயிண்ட் உள்ளிட்டவற்றிலும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. இது ஐடி துறை உள்பட பிற துறைகளில் பணியாற்றும் மக்கள் மற்றும் தனி பயன்பாட்டுக்காக மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசின் கணினி அவசர குழு சார்பில் எச்சரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நம் பயன்படுத்தும் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஓஎஸ் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓஎஸ் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்பாகும். அதேபோல் மைக்ரோசாஃப்ட்நிறுவனத்தின் வேர்ட் (Word), எக்ஸல் (Excel), பவர் பாயிண்ட்(Power Point) உள்ளிட்டவற்றையும் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஐடி துறையில் பணியாற்றுவோர் இதனை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் உள்பட பிற தளங்களை பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு சார்பில் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் ஓஎஸ், வேர்ட், எக்ஸ்ல், பவர் பாயிண்ட், பயன்படுத்தும் நபர்கள் புதிய பிரச்சனையை எதிர்கொள்ள உள்ளதாக வார்னிங் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் கணினி அவசர குழு (Indian Computer Energency Response Team orCERT-In) முக்கிய எச்சரிக்கையை வழங்கி உள்ளது.
அதில், ‛‛நம் நாட்டில் தற்போது மில்லியன் கணக்கான விண்டோஸ் சிஸ்டம்கள் ஹேக்கிங் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இது தனிநபர் மற்றும் தொழில், வர்த்தகம் சார்ந்த பயன்பாடுகளில் அதிக கவலைகளை ஏற்படுத்தி உள்ளது. வெறுமனே விண்டோஸ் ஓஎஸ் மட்டுமில்லை. மைக்ரோசாஃப்ட் டின் பிற பயன்பாட்டு தளங்களிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சமீபகாலமாக பல ஹேக்கிங் பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
இதன்மூலம் முக்கிய டேட்டாக்களை திருட முடியும். அதேபோல், ரிமோட் கோட் முறையில் தாக்குதல் செய்வது, பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தாண்டி சிஸ்டம்களில் உள்நுழைவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். இதுதவிர கம்ப்யூட்டர், லேப்டாப்பின் செயல்பாட்டை சேதப்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பிரச்சனை என்பது மைக்ரோசஃப்ட்டின் தயாரிப்புகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், மைக்ரோசாஃப்ட் ஆபிஸ், மைக்ரோசாஃப்ட் டைனமிக்ஸ், புரவுசர், டிவைஸ், டெவலப்பர் டூல்ஸ், எஸ்க்யூஎல் சர்வர், சிஸ்டம் சென்டர், ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர், சர்வர் சாப்ட்வேர், லீகசி மைக்ரோசாப்ஃட் தயாரிப்பான இஎஸ்யூ, அசூர் (Azure), செயலிகள், உள்ளிட்டவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது விண்டோஸ் 10 ஓஎஸ்ஸை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அடுத்தக்கட்டமாக விண்டோஸ் 11 ஓஎஸ் வந்துவிட்டுள்ளது. தற்போதைய சிக்கலில் இருந்து இந்த புதிய விண்டோஸ் 11 ஓஎஸ்சும் விடுபடவில்லை. விண்டோஸ் 11 பயன்படுத்துவோருக்கும் ஹேக்கிங் பிரச்சனையை எதிர்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளை குறிவைத்துள்ள ஹேக்கர்களால் டேட்டா திருட்டு உள்பட நம் நாட்டில் பல லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு பிரச்சனை பற்றி மைக்ரோசாஃப்ட் தங்களின் பயனர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. அதோடு இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு வசதியாக அப்டேட்டுகளை வழங்கி உள்ளது. இதனால் விண்டோஸ் ஓஎஸ் உள்பட மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளை பயன்படுத்தும் நபர்கள் உடனடியாக கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பை அப்டேட் செய்து ஒருமுறை Restart செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அப்டேட்டுகள் வருவதால் ஒவ்வொருவரும் தங்களின் சிஸ்டமில் Settings ஆப்ஷனுக்கு சென்று Auto Update என்பதை ஆன் செய்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications