ஒன்இந்தியாதமிழ் நடத்திய திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டி! வென்ற 3 குழந்தைகளுக்கு ரூ.3,500 பரிசு
சென்னை: உங்கள் அபிமான "ஒன்இந்தியாதமிழ்" இணையதளம் நடத்திய, திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் வெற்றி பெற்ற முதல் 3 குழந்தைகளுக்கு தலா ரூ.2000, ரூ.1000, ரூ.500 ரூபாய்க்கான கிஃப்ட் வவுச்சர் அன்பு பரிசாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
25 வருடங்கள் பாரம்பரியம் கொண்ட ஒன்இந்தியாதமிழ் இணையதளம், எங்களின் உயிர்நாடியான வாசகர்களுடன், உறவாக, நட்பாக நெருங்கி பழகி வருகிறது. சென்னை பெருவெள்ளத்தின்போது, உதவி தேவைப்படுவோருக்கும், உதவி செய்வோருக்கும் ஒன்இந்தியாதமிழ் ஒரு பாலமாக இருந்து முடிந்த உதவிகளை செய்தது.

ஒவ்வொரு விஷயத்திலும் வாசகர்களின் எண்ணம் என்ன என்பதை அறிந்துகொள்ள, கருத்துக்களை செவிமடுத்துக் கேட்க, கருத்துக் கணிப்புகளை (Poll) நடத்துகிறது. உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கமெண்ட் வசதியை செய்து தந்துள்ளதோடு, அநாகரீக கமெண்ட்களை நீக்கி நாகரீகத்தை பராமரிக்க, தமிழ் ஊடக வரலாற்றிலேயே இல்லாத ஒரு வசதியாக, இந்த பணியை செய்வதற்காகவே தனி ஊழியர்களையும் நியமித்துள்ளது.
அதேபோலத்தான், கடந்த சில வருடங்களாக மார்கழி மாதத்தில், திருப்பாவை-திருவெம்பாவை போட்டித் தொடரை நடத்தி, முதல் 3 இடங்களை பிடிக்கும் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்து வருகிறது "ஒன்இந்தியாதமிழ்".
"தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்பது தமிழ் மண்ணின் ஆன்மீகம். கடவுளின் தொண்டர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், கடவுளை மகிழ்விக்கும் என்ற தத்துவம் கொண்ட தமிழகத்தில், தமிழ் கொண்டு பக்தி செய்த ஆண்டாளையும், மாணிக்கவாசகரையும் ஒரு சேர நினைக்கும் வகையில், திருப்பாவை-திருவெம்பாவையை சிறப்புற பாடும் குழந்தைகளுக்கு பரிசளித்து மகிழ்கிறது "ஒன்இந்தியாதமிழ்".
அந்த வகையில், போட்டி பற்றிய அறிவிப்பை நமது இணையதளம் மூலமும், நமது சமூக வலைத்தள பக்கங்களிலும் வெளியிட்டதும், நூற்றுக்கணக்கான குழந்தைகள், திருப்பாவை-திருவெம்பாவை பாடலை பக்தியோடு பாடி நமக்கு அனுப்பி வைத்தனர். வந்துகுவிந்த பாடல்களை கவனமாக பரிசீலித்து, முதல் மூன்று இடங்களுக்கான குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முதல் மூன்று பரிசுபெறுவோர் விவரம்:
1) V.லக்ஷா, 11 வயது,

2) S.சம்ஹிதா ஸ்ரீ, 4 வயது,

3) A.திவிஜா, காரிமங்கலம், தருமபுரி மாவட்டம்.

போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுமே சிறப்பாக பாடியிருந்ததால் முதல் மூன்று இடங்களை தேர்வு செய்வது, நடுவர்களுக்கு, மிகப்பெரிய சவாலாக மாறியது. அந்த அளவுக்கு சிறப்பான பங்களிப்பை குழந்தைகள் வழங்கியிருந்தனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு, முதல் மூன்று இடங்களை பிடிக்க முடியாத குழந்தைகள், வரும் மார்கழியில் நடைபெறப்போகும் போட்டியில் புது உத்வேகத்தோடு பங்களித்து பரிசுகளை வெல்லவும் வாழ்த்துகிறோம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications