இதுக்குத்தான் இவர் தேவை.. சார்ஜ் எடுத்த ஒரு வாரத்தில்.. கலக்கிய குமரகுருபரன் ஐஏஎஸ்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் ஐஏஎஸ் பதவி ஏற்றுள்ள நிலையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக வெறும் ஒரு வாரத்தில் சென்னையில் அதிரடி ஆக்சன்களை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குமரகுருபரன் ஐ ஏ எஸ் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகி உள்ளார். நாய்க்கடி விவகாரம் மற்றும் சென்னையில் மாடுகள் தொல்லை விவகாரத்தில் இவர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டது.

ias m k stalin

முக்கியமாக சென்னை நங்கநல்லூர் பகுதியில் மாடுகள் உலா வரும் விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. சமீபத்தில் ராயபுரம் பகுதியில் 5 குழந்தைகள் உட்பட 29 பேரை வெறிநாய் கடித்தது. காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு வெறிநாய் தடுப்பு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அங்கே மக்களை கடித்த நாயை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். பிரேதப் பரிசோதனையில் அந்த நாய்க்கு ரேபீஸ் வெறிநாய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பல இடங்களில் குழந்தைகள் நாய்க்கடிக்கு ஆளாகினர்.

ராட்வீலர்: கடந்த மே மாதம் கூட சென்னை ஆயிரம் விளக்கு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்களை வளர்த்து வந்த உரிமையாளர், சிறுமியை அவை கடித்த போது கண்டு கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் புகார் கூறினர்.

ஸ்டாலின் ஆக்சன்: சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் ஐஏஎஸ் பதவி ஏற்றுள்ள நிலையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 9 கால்நடைகள் பிடிக்கப்பட்டு கிடங்கில் அடைக்கப்பட்டன. மேலும், பள்ளிக்கரணையில் இருந்து 2 மாடுகளை பிடித்து பறிமுதல் செய்தனர். சென்னை முழுவதும் கால்நடைகள் தேடி பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

அதோடு இல்லாமல் தற்போது சென்னையில் உள்ளே பெரும்பாலான பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளும் நடக்கின்றன. இரவு நேரத்தில் சென்னை முழுக்க சுத்தம் செய்யும் பணிகள் ஒரு பக்கம் நடக்கின்றன. டன் கணக்கில் மணல் அள்ளப்படுகிறது. அதோடு இல்லாமல் சென்னையில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டு அப்படியே விடப்பட்ட வாகனங்கள் நீக்கப்படுகின்றன. வந்த ஒரு வாரத்தில் குமரகுருபரன் அதிரடியை காட்டி வருகிறார்.

அதிரடி காட்டும் குமரகுருபரன்: ஜே. குமரகுருபரன், ஐ.ஏ.எஸ்., நல்ல அனுபவம் கொண்டவர். 2004 ஆம் ஆண்டு அனுபவ இந்திய நிர்வாகப் பணியைச் சேர்ந்தவர். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பதவிகளில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். 19 வருட ஆட்சியில் முதல் 4-5 வருடங்கள் திமுக ஆட்சிக்கு கீழ்தான் இவர் ட்ரெயினிங் எடுத்தார்.

அதன்பின் பல்வேறு துறைகளில் இவர் செயலாளர் பொறுப்புகளை வகித்து இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இவர் பதவி ஏற்றுள்ளார். ராதாகிருஷ்ணன் இந்த பதவியில் இருந்து மாறிய நிலையில் குமரகுருபரன் பதவி ஏற்றுள்ளார்.

மாற்றம்: சமீபத்தில்தான் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் திறமையான அதிகாரிகள். அதிலும் அருண் இளமையான துடிப்பான அதிகாரி. இன்னொரு பக்கம் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+