ஆசை வலையில் வீழ்த்தி திருமணம்.. மன்னார்குடி டூ தாம்பரம் வரை 4 பேரிடம் மோசடி.. தில்லாலங்கடி பெண் கைது
சென்னை: மன்னார்குடி முதல் சென்னை வரை 4 ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்த நகை, பணத்தை சுருட்டி விட்டு தப்பி சென்ற அபிநயா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அருகே இருக்கும் தாம்பரம் பகுதியில் உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
நடராஜனுக்கு முடிச்சூர் பகுதியில் உள்ள அபிநயா என்ற ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அங்குள்ள பேக்கரி ஒன்றில் அபிநயா பணியாற்றி வந்தார்.

கோவிலில் திருமணம்
இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தனது பெற்றோருடன் சண்டையிட்டு விட்டதாகவும் விடுதியில் தனியாக தங்கியிருப்பதாகவும் அபிநயா தனது காதலன் நடராஜனிடம் கூறியிருக்கிறார். இதையும் அப்படியே நம்பிய நடராஜன், கடந்த ஆகஸ்ட் மாதம் அபிநயாவை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஒரு மாதம் இருவரும் ஒன்றாக தான் வசித்து வந்தனர்.

செல்போன் சுவிட்ச் ஆப்
இந்த நிலையில் ஒருநாள் தீடிரென ஒருநாள் மனைவி அபிநயா மாயமாகினர். அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டது அதுவும் சுவிட்ச் ஆப் என்றது. வீட்டில் இருந்த 17 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் பணம் புதிய பட்டுப்புடவைகள் என அனைத்தும் மாயமாகி இருந்தது. தனது மனைவி அபிநயதான் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடியதை அறிந்த நடராஜன் இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

பல்வேறு திடுக்கிடும் தகவல்கள்
அபிநயாவின் ஆதார் அட்டையை கைப்பற்றிய போலீசார் அதில் இருந்த முகவரியை கண்டுபிடித்து விசாரித்தனர். இதில் செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள விடுதி ஒன்றில் அபிநயா தங்கியிருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக அந்தவிடுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அபிநயாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

திட்டமிட்டு மோசடி
அபிநயாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 8 வயதில் மகன் இருப்பது தெரியவந்தது. நடராஜன் வீட்டில் இருந்து எடுத்துச்சென்ற நகைகளை மதுரையில் வைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் போலீசார் அங்கும் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். நடராஜனை திட்டமிட்டு காதலிப்பது போல நடித்து அபிநயா இந்த மோசடி வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த தகவலை கேட்ட நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். நடராஜனை போல மேலும் 3 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்தனர்.

8-வயதில் மகன் உள்ளான்
2011 ஆம் ஆண்டு மன்னார்குடியை சேர்ந்த வாலிபருடன் முதல் திருமணம் அபிநயாவுக்கு நடந்துள்ளது. வெறும் 10 நாட்களில் அவரை விட்டு பிரிந்து வந்த அபிநயா, மதுரையை சேர்ந்த செந்தில் குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தான் 8-வயதில் மகன் உள்ளான். பின்னர் செந்தில் குமாரை விட்டு பிரிந்து வந்த அபிநயா, கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். அவரையும் வெறும் 10 நாளில் ஏமாற்றி விட்டு வந்த அபிநயா, அதன்பிறகுதான் ஊரப்பாக்கத்தில் தங்கியிருந்து நடராஜனை ஆசை வலையில் வீழ்த்தி காதலிப்பது போல் மோசடி செய்து திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறார்.

போலீசார் விசாரணை
கடைசியாக திருடிய பணத்தை 2-வது கணவர் செந்தில் குமாரிடம் கொடுத்துள்ளார். இருவரும் அந்த பணத்தை செலவு செய்துள்ளனர். இதையடுத்து செந்தில் குமாரையும் போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டு வரும் அபிநயா தனது பெயரில் 32 சிம்கார்டுகள் வாங்கி வைத்திருந்தார். ஒவ்வொருவரிடமும் தனித்தனி நம்பர்களில் பேசி திட்டம் போட்டு ஏமாற்றி இருக்கிறார். மேலும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பலரையும் ஏமாற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications