பின்னாலிருந்து சீட் வழியாக கையை நுழைத்து.. அசிங்கமாக நடந்து கொண்டார்.. கண்டக்டர் மீது பெண் பாய்ச்சல்
அரசு பஸ் கண்டக்டர் மீது பெண் புகார் தந்துள்ளார்
Recommended Video
சென்னை: "அந்த கண்டக்டர் என் மார்பகத்தை அழுத்தி.. பாலியல் தொல்லை தந்தாரு" என்று இளம்பெண் ஒருவர் பகிரங்கமாக புகார் சொல்லி உள்ளார்.
கோயம்பேட்டில் இருந்து கும்பகோணம் செல்லும் அரசு பஸ்ஸில், இளம் பெண் ஒருவருக்கு கண்டக்டர் ராஜூ நடுராத்திரி.. பாலியல் தொல்லை தந்துள்ளார். இதை பற்றி சம்பந்தப்பட்ட பெண் தமிழ்செல்வி போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்செல்வி பேசும்போது: "நான் பெரம்பூர்ல இருக்கேன். மன்னார்குடி போறதுக்காக நான் கோயம்பேட்டில் பஸ் ஏறினேன். வள்ளலார் சன்மார்க்கத்தில் நான் இருக்கிறேன். 5 நாளா அன்னதானம் தந்து வருகிறேன். விளக்கு ஒன்று வாங்கறதுக்காக நான் ஊருக்கு போனேன்.

கண்டக்டர் ராஜு
இதுக்காகத்தான் கோயம்பேட்டில் ராத்திரி 12 மணிக்கு பஸ் ஏறினேன். செங்கல்பட்டு தாண்டி பஸ் போயிட்டே இருந்தது. அப்போ எனக்கு குளிரா இருந்தது. ஜன்னலை மூடலாம்னு பார்த்தால், அது உடைஞ்சி இருந்தது. பின்னாடி இருந்து ஒரு குரல், என்னங்க லாக் பண்ணனுமா?ன்னு கேட்டது. அவர்தான் கண்டக்டர் ராஜு.

தூங்கிவிட்டேன்
அதுவரைக்கும் அவர் என் சீட்டுக்கு பின்னாடி இருக்கிறதே எனக்கு தெரியாது. நான் ஆமாம்னு சொன்னதும், கதவை மூட வந்தார். நான் கொஞ்ச நேரத்துல அசந்து தூங்க ஆரம்பிச்சேன். அப்பதான் என் செஸ்ட் பிடிச்சு, அமுக்க வந்தது போல இருந்தது. நான் முதலில், ஜன்னலின் கைப்பிடிதான் அங்கே இடிக்குதுன்னு நினைச்சேன். அதனால அந்த கைப்பிடியை கீழே இறக்க நினைச்சேன்.

கும்பகோணம்
அப்பதான் கைப்பிடி ரொம்ப சாஃப்ட்டா இருந்தது. இவ்ளோ சாப்ஃட்டா இருக்கேன்னு பார்த்தால், கண்டக்டருடைய கை அது. அப்படியே அவன் கையை பிடிச்சு அடிக்க போய்ட்டேன். டீ குடிக்க கூட வண்டியை நிறுத்தல. கோயம்பேட்டில இருந்து கும்பகோணம்வரை டிரைவரும் மாத்தல. நான் உடனே இறங்கி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் பண்ணேன்.

விழிப்புணர்வு
"ஏய் என்ன ஓவரா பண்றே.. உனக்கென்ன கம்ப்ளைன்ட் தானே தரணும்? ஒழுங்கா என் மேல கம்ப்ளைன்ட் குடுத்துட்டு போ. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது"ன்னு கண்டக்டர் அங்க வந்தும் என்னை மிரட்டறார். இந்தமாதிரி பாலியல் தொல்லை அதிகமாக இருக்கு. கும்பகோணம் மட்டுமிலை.. தமிழ்நாட்டில இருககிற பஸ் ஸ்டாண்ட், கோயில்ன்னு எல்லா இடத்துலயுமே பாலியல் தொல்லை இருக்கு. இவங்களுக்கு எல்லாம் ஒரு விழிப்புணர்வா இருக்கணும்னு தான் நான் இங்கே வந்து மனு தந்திருக்கேன்" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications