பாத்ரூமில் சின்ன பெண்களிடம் தவறாக நடக்கிறார்.. நாசம் செய்கிறார்.. கணவர் மீது மனைவி பரபர புகார்
Recommended Video
சென்னை: "டுடோரியல் காலேஜில் படிக்க வரும் சின்ன சின்ன பொண்ணுங்களிடம் என் புருஷன் தப்பா நடந்துக்கிறார். ஆம்பள பசங்களை விட்டு அந்த பெண் பிள்ளைகளை சீண்ட விடுகிறார். இவர் பஞ்சாயத்து செய்வது போல் செய்து, அந்த பெண்களையும் பாத்ரூம் கூட்டிட்டு போய் நாசம் செய்கிறார்" என்று பெண் ஒருவர் கல்லூரி உதவி பேராசிரியர் மீது பகீர் புகார் அளித்துள்ளார்.
சென்னையை சேர்ந்தவர் பிரியலட்சுமி. 41 வயதாகிறது. இவரது கணவன் ஏழுமலை. இவர் பச்சையப்பன் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்க்கிறார். பிஎச்டி வாங்கி உள்ளாராம்.
கடந்த 98-ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்துள்ளது. 19 வயதில் ஒரு பெண் உள்ளார். இந்நிலையில், கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவுடன் பிரியலட்சுமி வந்திருந்தார்.

விவாகரத்து
அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது, தனது கணவன் மீது புகார் சொல்ல வந்திருப்பதாக கூறினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: "என் கணவர்மீது புகார் கொடுக்க வந்திருக்கேன். அவருக்கு பல பெண்களோட தொடர்பு இருக்கு. என்னை ஒரு வருஷத்துக்கு முன்னாடியே விவாகரத்துக்கு வற்புறுத்தினார். அப்புறம்தான் விஷயம் தெரிஞ்சது.

டுடோரியல்
டுடோரியல் காலேஜில் படிக்க வரும் சின்ன சின்ன பொண்ணுங்களிடம் தவறான செயல்களில் ஈடுபடுகிறார். ஆம்பள பசங்களை விட்டுஅந்த பெண் பிள்ளைகளை சீண்ட விடுவது, வாத்தியார்களை வைத்து சீண்ட விடுவது, பிறகு இவர் பஞ்சாயத்து செய்வது போல் செய்து, அந்த பெண்களையும் பாத்ரூம் கூட்டிட்டு போய் நாசம் செய்வது இப்படி செய்து கொண்டிருக்கிறார்.

மிரட்டல்
படிக்க வரும் ஆண் பிள்ளைகளை பெண் பிள்ளைகளுடன் இரவில் அங்கேயே தங்க வைப்பது என்று பல வேலைகளில் ஈடுபடுகிறார். அந்த பெண் பிள்ளைகளை போட்டோ, வீடியோ எடுத்து வெச்சு மிரட்டுறார். எனக்கு இதெல்லாம் 6 மாசத்துக்கு முன்னாடிதான் தெரிஞ்சது. யார்கிட்ட சொல்றது, என்ன பண்றதுன்னே தெரியலை.

அபார்ஷன்
இதுக்கு முன்னாடியே டுடோரியலில் படிக்க வந்த ஒரு பெண்ணின் அபார்ஷன் பேப்பர் இருந்தது. அதை பார்த்து நான் ஏற்கனவே கேட்டேன். உனக்கு அதை பற்றி எதுவும் தெரியாது என்று என்னை அடக்கி விட்டார். இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டார். என் பொண்ணு படிக்கணும்னு சாக்கு சொல்லி, திருப்பதியில் ஒரு வீடு எடுத்து வாடகைக்கு என்னையும், என் பொண்ணையும் 8 வருஷத்துக்கு முன்னாடியே அங்கே அனுப்பிட்டார்.

தள்ளுபடி
இங்கே நந்தினி என்ற பெண்ணை கல்யாணம் செய்துக்கிட்டு, என் சொத்தை அனுபவிச்சிட்டு வர்றார். அவருடைய வற்புறுத்தலால் விவாகரத்து வழக்கு பதிவு செய்தோம். ஆனால் அது தள்ளுபடி ஆனது. இப்போ எனக்கு ஜீவனாம்சம் வேணும், எங்களுக்கு ஒரு வீட்டை தர வேண்டும். எனக்கும் என் பொண்ணுக்கும் ஏதாவது பிரச்சனை வந்தால் அவர்தான் காரணம்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்" என்றார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications