அமுதரசிக்கு வந்த சோகம்.. என்ன காய்ச்சல் என்று கண்டுபிடிக்கும் முன்பே.. பரிதாபமாக போன உயிர்!
சென்னையில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலியானார்
சென்னை: என்ன காய்ச்சல் என்று கண்டுபிடிக்கும் முன்னரேயே மர்ம காய்ச்சலால் பரிதாபமாக உயிரை விட்டார் அமுதரசி.. சென்னையில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.. இதனால் நிறைய இடங்களில் தண்ணீரும் தேங்கி நிற்கின்றன. இப்படி அசுத்த நீரில் உருவாகும் கொசுக்களால், பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.

இதில் டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கும் சோகமும் தினந்தோறும் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு, முழு வீச்சில் களம் இறங்கி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறது.
எனினும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு நிறைய பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போன வாரம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் திடீரென மக்கள் குவிந்து விட்டனர். சிகிச்சை பெறவும், மாத்திரைகளை வாங்கவும் நீண்ட கியூவிலும் நின்ற அவலம் ஏற்பட்டது.
இப்போது, சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். ஆவடி அருகே திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் மதன். இவரது மனைவி அமுதரசி. இவருக்கு 40 வயதாகிறது. எட்டியம்மன் நகரில் வசித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அமுதரசிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமுல்லைவாயிலில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு அவரை சிகிச்சைக்காக மதன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை எடுத்து கொண்டும், அமுதரசிக்கு காய்ச்சல் குறையவில்லை என தெரிகிறது.
இதன் காரணமாக போரூரில் இருக்கும் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அமுதரசி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் அவரை கவனித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அமுதரசி பரிதாபமாக உயிரிழந்தார். மர்ம காய்ச்சலால் பெண் உயிரிழந்தது ஆவடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications