சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹேமலதா வீட்டு பக்கம் இறந்து கிடந்த நாய்.. அநியாயமா பறி போன பெண்ணின் உயிர்.. அலட்சியத்தால் விபரீதம்!

டெங்கு ஜுரத்துக்கு இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    நகராட்சியின் அலட்சியத்தால் பறிபோன பெண்ணின் உயிர்-வீடியோ

    சென்னை: ஹேமலதா வீட்டு பக்கம் ஒரு நாய் செத்து போய் பல நாள் ஆச்சு.. யாருமே அதை வந்து எடுத்து போடல.. கடைசியில் ஹேமலதா உயிர் இன்று பறிபோனதுதான் மிச்சம்!

    சென்னை பள்ளிக்கரணை அடுத்த சித்தாலபாக்கம் எம்ஜிஆர் நகர் 2-வது தெருவில் வசித்து வரும் தம்பதி கதிரேசன் - ஹேமலதா. கதிரேசன் கார்ப்பென்டர் வேலை பார்க்கிறார். ஹேமலதாவுக்கு 30 வயதாகிறது.

    10 நாளைக்கு முன்பு இவருக்கு ஜுரம் வந்துவிட்டது. அதனால் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் காட்டியதற்கு டெங்கு ஜுரம் வந்திருப்பதாக சொன்னார்கள். அதனால் உடனடியாக ஹேமலதாவை குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

     குமரி மாவட்டத்தில் கனமழை.. தண்டவாளத்தில் தண்ணீர்.. ரயில் சேவை பாதிப்பு! குமரி மாவட்டத்தில் கனமழை.. தண்டவாளத்தில் தண்ணீர்.. ரயில் சேவை பாதிப்பு!

    உயிரிழப்பு

    உயிரிழப்பு

    அங்கு போதிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு ஹேமலதாவை கொண்டு சென்றனர். ஏற்கனவே ஹேமலதாவுக்கு சுகர் இருந்திருக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிக்கு டெங்கு ஜுரத்தை குணப்படுத்துவது என்பது டாக்டர்களுக்கே பெரிய சவாலாக இருந்தது. எவ்வளவோ போராடியும், இன்று காலை சிகிச்சை பலனின்றி ஹேமலதா உயிரிழந்து விட்டார்.

    சாக்கடைகள்

    சாக்கடைகள்

    டெங்குவால் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, ஹேமலதாவின் வீட்டைச்சுற்றி நிறைய குப்பைகள் சிதறி கிடந்துள்ளன. மழைநீர் அப்படி அப்படியே தெருவோரம் தேங்கி கிடந்துள்ளன.. இதனால் ஹேமலதா வீட்டை ஒட்டி செல்லும் கால்வாயில் ஏகப்பட்ட கொசுக்கள் உற்பத்தி ஆகி இருக்கின்றன.

    டெங்கு காரணம்

    டெங்கு காரணம்

    இதைதவிர, வீட்டு பக்கத்திலேயே ஒரு நாய் இறந்துள்ளது. அந்த நாயை பல நாட்கள் ஆகியும் ஊராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தாமலேயே இருந்திருக்கிறார்கள். இதெல்லாம் சேர்ந்துதான் ஹேமலதாவுக்கு டெங்கு வர காரணம் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.

    அநியாய மரணம்

    அநியாய மரணம்

    இதையடுத்து, இந்த விவகாரம் பெரிதாவதற்குள், லீவு நாள் என்று கூட பார்க்காமல், ஹேமலதா வீட்டு பக்கத்தில் உள்ள குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து வருகிறார்கள்.. ப்ளீச்சிங் பவுடரை தூவி தெருவே வெள்ளையாக காணப்படுகிறது. "இப்போ வந்து இவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்களே.. இப்படி தினமும் செய்திருந்தால், ஒரு உசுரு அநியாயமா போயிருக்காதே" என்று மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

    English summary
    30 year old young woman died due to Dengue fever in pallikaranai near chennai and Public appeals to municipal administration
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X