Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலைக்காரி டூ முதலாளியம்மா.. 'பக்குவமாய் செய்த பத்மா'.. வேறலெவல் பிளான்.. சென்னைக்கே புதுசா இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு யாருமே இல்லை அனாதை என்று சொல்லி அப்பாவியாய் வீட்டு வேலைக்கு வந்த பின்னர், வீட்டின் உரிமையாளர் மறைந்த நிலையில், தன்னை அவர் திருமணம் செய்தததாக கூறி சொத்தை அபகரித்து மிரட்டுவதாக அவரது குழந்தைகள் வேதனை தெரிவித்துள்ளார்..

தந்தையும் தாயும் இல்லாத நிலையில் வீட்டு வேலைக்கு வந்த பெண் தங்களது சொத்துக்களை எழுதி தரக்கோரி மிரட்டுவதாக சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த இளம்பெண்கள் வேதனையுடன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்..

Woman maid arrested for property fraud in Chennai

சென்னை நீலாங்கரையில் அரசின் சட்ட ஆலோசகராக இருந்து ஓய்வு பெற்றவர் டிஎல் ராஜா இவரது வீட்டில் பத்மா என்ற பெண் வீட்டு வேலைக்கு வந்துள்ளார்.. இந்நிலையில் ராஜா உயிரிழந்த பின்னர், அவரது மகள்களிடம் உங்கள் அப்பா என்னை திருமணம் செய்துள்ளார். எனக்கு சொத்துக்களை எழுதி தர வேண்டும் என்று மிரட்டி உள்ளார்.

இது தொடர்பாக இளம் பெண்கள் அளித்த பேட்டியில், "என் அப்பா பெயர் டிஎல் ராஜா, அரசின் சட்ட ஆலோசகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.. எங்க வீட்டுக்கு வீட்டு வேலை செய்ய 2018ம் ஆண்டு பத்மா என்ற பெண் வந்தார்.

Woman maid arrested for property fraud in Chennai

அவங்க யாருமே இல்ல அனாதைன்னு சொல்லி பாவமா வீட்டு வேலை செய்யுறதுக்காக வீட்டுக்குள்ள வந்ததால் ஏற்றுக்கொண்டோம். எங்க அம்மா 2015ம் ஆண்டே இறந்துவிட்டார். அதனால் வீட்டு வேலை செய்யுறதுக்கு ஆள் இருக்கட்டும் என்று சேர்த்துக் கொண்டோம். 2018 முதல் வீட்டு வேலை செய்து வந்த அவர், அப்பாவிற்கு பிஏ போல் டைப்பிங் ஒர்க் என எல்லா வேலைகளையும் செய்து வந்தார்.

அப்பா இருந்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. சமைப்பதற்கு எல்லாவற்றுக்கும் உதவினார்.. வேலை செய்து வந்தார்.. அப்பா வந்து கடந்த 2022ம் ஆண்டு இறந்துவிட்டார். அவர் இறப்பிலேயே எங்களுக்கு சந்தேகம் உள்ளது.. மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று சொன்னதால் அதை பற்றி பேசவில்லை. அப்பா இறந்த உடன் உடலை தகனம் செய்துவிட்டு, காரியமும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தோம்.

Woman maid arrested for property fraud in Chennai

வீட்டிற்கு வந்த உடனே உங்க அப்பாவும் நானும் இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொண்டோம் என்று கூறினார். என்ன ஆதாரம் இருக்கு.. இத்தனை நாட்களாக வேலைக்காரியாகத் தானே இருந்தீர்கள் என்று கேட்டோம். ஆனால் பத்மா எங்களுடைய ஒரு வீட்டில் இருந்து ரவுடிகளை வைத்து வீட்டை விட்டு வெளியேற்றி, ஆக்கிரமித்துக் கொண்டார்.. மேலும் வீட்டை அவர் பெயரில் எழுதி கொடுக்குமாறு மிரட்டுகிறார்.. வீட்டை எழுதிக் கொடுக்கா விட்டால் உங்கள் குழந்தை எல்லாம் என்ன ஆகும் என்று தெரியாது என்று மிரட்டுகிறார்.. போலீசில் புகார் அளித்துவிட்டோம்.. பட்டினம்பாக்கம் ஸ்டேசனில் எப்ஐஆர் பதிவாகி உள்ளது.. இந்நிலையில் எங்க அப்பா இறந்த பின்னர், அவருடைய காரை, அவரது கையெழுத்து போட்டு விற்றுள்ளார். இப்ப அவரை கைது செய்துள்ளார்கள்.

Woman maid arrested for property fraud in Chennai

இப்போதும் நாங்கள் காவல்துறை பாதுகாப்பில் தான் இருக்கிறோம். இல்லாட்டி எங்க நிலைமை என்னாகியிருக்கும் என்று தெரியவில்லை.. ஈஞ்சம்பாக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளோம்.. பட்டினம்பாக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளோம். எப்ஐஆரை நீதிமன்ற ஆணையின் மூலம் வாங்கி உள்ளோம்.. முதலில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததால் கோர்டில் சென்று வழக்கு போட்டு உத்தரவுகளை பெற்றோம். பத்மா மீது இரண்டு எப்ஐஆர் உள்ளது. இதில் இரண்டாவது எப்ஐஆரான போர்ஜரி கேஸில் தான் அவரை கைது செய்துள்ளது போலீஸ். இன்னமும் எங்களுக்கு மிரட்டல் வந்து கொண்டே தான் இருக்கிறது" இவ்வாறு அந்த பெண்கள் பேட்டி அளித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+