மகளிர் உரிமைத் தொகை.. அக்கவுண்டுக்கே வரப் போகுது ரூ.1000! ‘இந்த’ தேதியை மறக்காதீங்க! எல்லாம் ரெடி!
சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஜூலை 15ம் தேதியிலிருந்து புதிய விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் கடந்த முறை விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் என அனைவரும் இந்த மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் அளவிலான பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த முகாம்களில் மக்கள் நேரடியாக விண்ணப்பிப்பதோடு, இ சேவை மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
மேலும் புதிதாக திருமணமானவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் தற்போது சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் உரிமை தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 14 லட்சமாக குறைந்து இருக்கிறது.
அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசு பணிகளில் சேர்ந்தவர்கள், உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதிதாக திருமணமானவர்கள், புதியதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், பெயர் நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் மேல் முறையீடு செய்தவர்கள் என மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை விரைவில் புதுப்பிக்கப்பட இருக்கிறது.
புதிய பயனர்கள் இணைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், அண்மையில் வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஜூலை 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கூறியிருந்தார். மேலும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலேயே ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. 45 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலேயே அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட உள்ளது. அது மட்டும் அல்லாமல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பாடு மகளிருக்கு புதிய விலக்குகளும் அளிக்கப்பட இருக்கிறது. நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பப் பெண்கள், பிற ஓய்வூதிய திட்டங்களில் ஓய்வூதியம் பெறுவோர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதனால் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஜூலை 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற இருக்கிறது. இதை அடுத்து நகர், மாநகர், வட்டாட்சியர் அலுவலகங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற இருக்கிறது. மேலும் ஊராட்சி அளவிலான பகுதிகளிலும் 10,000 முகாம்களை நடத்த தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது. அதே நேரத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களை எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் சிரமமின்றி விண்ணப்பிக்கும் வகையில் இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications