திண்டுக்கல்லில் விஜய்க்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள்.. போலீஸ் அதிரடி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என 3 பெண் தொண்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர்.. மாற்றுத்திறனாளி பெண் உட்பட 2 பெண் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி, திண்டுக்கல்லில் இரண்டு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் அவர்களைக் கைது செய்துள்ள நிலையில், அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் நகர்வுகளுக்கு இடையே, திண்டுக்கல்லைச் சேர்ந்த சரண்யா மற்றும் வளர்மதி ஆகிய இரு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இதில், ஜனநாயக முறைப்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டம் 19(1)(a) மற்றும் 19(1)(b)-ன் படி, அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
அமைதியாக காரியம் சாதிக்கும் விஜய்.. திமுக, அதிமுக எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தவெகவிற்கு சாதகமாகிறதா?
பொதுமக்களுக்கு இடையூறு இன்றி அறவழியில் இந்தப் போராட்டம் நடைபெற்ற போதிலும், பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். பெண் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், உடன்பாடு எட்டப்படாததால் இருவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 107 எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் நிலையில், ஆளுநர் மாளிகையின் முடிவை நோக்கி ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது.
என்ன நடக்கிறது
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 108 இடங்களை வென்றதால் தனிப்பெரும் கட்சியாக நிற்கிறார். அவருக்கு காங்கிரஸ் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவை வழங்கி உள்ளது. இன்னும் 5 முதல் 6 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும். அந்த ஆதரவை அவர் அதிமுக கூட்டணியில் இருந்து பெற முயற்சி செய்யவில்லை,, உதாரணமாக பாமகவிற்கு 4 இடங்கள் உள்ளன. அமமுகவிற்கு ஒரு இடம் உள்ளது. இவற்றை கேட்டு பெற விஜய் விரும்பவில்லை.. அதேநேரம் அதிமுகவிடமும், பாஜகவிடமும் விஜய் ஆதரவு கேட்கவில்லை.. அவர் முழுக்க முழுக்க திமுக கூட்டணியை தான் குறிவைத்து செயல்படுகிறார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸை தன் பக்கம் விஜய் கொண்டுவந்துவிட்டார். ஆனால் திருமாவளவனின் விசிக இரண்டு இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களையும் வைத்துள்ளது. இவை திமுக கூட்டணியில் வென்ற இடங்கள். இவர்களிடம் தான் விஜய் ஆதரவு கேட்டுள்ளார். இவர்களிடம் ஆறு இடங்கள் உள்ளன. எனவே இந்த சூழலில் 6 இடங்களை சேர்த்தால் 119 வந்துவிடும். எனவே ஆளுநர் எந்த பிரச்சனையும் செய்யாமல் விஜய் பதவியேற்க ஒப்புக்கொள்வார். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெல்வார். ஆனால் விஜய்க்கு ஆதரவு அளிப்பார்களா என்பதே இப்போது பெரிய கேள்வியாக இருக்கிறது.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு












Click it and Unblock the Notifications