சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தியா வழக்கில் தீர்ப்பு.. பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பெண்கள், குழந்தைகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    12,000 போலீஸ் குவிப்பு... அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு

    சென்னை: அயோத்தியா வழக்கில் தீர்ப்பு வருவதைஅடுத்து அந்த பகுதியில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு வெளியாகவுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் வரும் 17-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.

    Women, kids in Ayodhya are being sent to safer places ahead of verdict

    அதற்குள் அயோத்தியா உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வெளியிடுகிறார். இதனால் மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அயோத்தியில் இருப்பவர்கள் உணவு, மருந்து ஆகியவற்றை இருப்பு வைக்க தொடங்கிவிட்டனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ஜெயலலிதாவுக்கு நினைவிடத்தில் சிலை... இ.பி.எஸ். நடவடிக்கைஜெயலலிதாவுக்கு நினைவிடத்தில் சிலை... இ.பி.எஸ். நடவடிக்கை

    மாநிலத்தில் பாதுகாப்பு அணிவகுப்பில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோரக்பூரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு அணிவகுப்பில் இருந்தனர்.

    பாதுகாப்பு கருதி அயோத்தியாவில் உள்ள பெண்கள், குழந்தைகளை வேறு பகுதிகளில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வருகின்றனர். வழிப்பாட்டு தலங்களின் மீது தாக்குதல் நடத்தாவண்ணம் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் கூறுகையில் இந்த முறை சையதுவாதா மீது தாக்குதல் நடத்தப்படும் என வதந்திகள் கிளம்பியுள்ளன. இதனால் முஸ்லிம் குடும்பத்தினர் கவலையடைந்து பாதுகாப்பு கருதி வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    English summary
    Women, kids in Ayodhya are being sent to safer places as its verdict will be expected to come soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X