பார்சலோடு அப்பீட் ஆன பாஜக தலைகள்.. ஏ சோறு தரமாட்டியா? அண்ணாமலை கூட்டத்தில் சீறிய பெண்கள் - வீடியோ
சென்னை: சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை சார்பாக நடத்தப்பட்ட பேரணியில் உணவு பொட்டலங்களை பாஜக நிர்வாகிகள் சிலர் அள்ளிக்கொண்டு போனதால் போராட்டத்திற்கு வந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த மே 21ம் தேதி நாடு முழுக்க பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் மாநில அரசும் வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பாஜக இன்று போராட்டத்தில் குதித்தது.
Recommended Video
ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டையை நோக்கி பாஜக சார்பாக பேரணி நடத்தப்பட்டது. பாஜக தொண்டர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சாப்பாடு இல்லை
இந்த நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தங்களுக்கு சாப்பாடு வழங்கப்படவில்லை என்று அங்கே பிரச்சனை செய்தனர். போராட்டம் தொடங்கிய ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே சாப்பாடு வழங்குவதற்காக ஒரு அறை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த அறையில் இருந்த சாப்பாடு எதுவும் அங்கு வந்த போராட்டக்காரர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு இருந்த உணவு பொட்டலங்களை பாஜக நிர்வாகிகள் சிலர் எடுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சாப்பாடு தாயா
இதையடுத்து அங்கு உணவு கேட்டு வந்த பெண்கள்.. சாப்பாடு இல்லை என்றதும் கோபம் அடைந்தனர். உள்ளே பாக்சில் கட்டி வைக்கப்பட்டு இருந்த சாப்பாட்டை பார்த்து.. ஏ சோறு தாயா என்று கோபமாக கத்தினர். ஆனால் அந்த சாப்பாடு சில நிர்வாகிகளுக்கு கொடுப்பதற்காக எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சாப்பாடு கிடைக்காத விரக்தியில்.. ஏ சாப்பாடு கொடுக்க மாட்டியா? பாக்ஸ் பாக்ஸா எடுத்துட்டு போறியே.. எங்களுக்கு கொடுக்க மாட்டியா?

என்ன கதை இது?
நீங்க எல்லாம் தலைவரா? போராட கூப்டீங்கன்னு வந்து பொண்ணுங்க போராடினா சாப்பாடு கொடுக்க மாட்டீங்களா? வயசானவங்க எல்லாம் வந்து போராடி இருக்காங்க. என்ன கதையா இருக்குது இது என்று கோபமாக கத்தினார். இடையே இடையே சில கொச்சையான வார்த்தைகளையும் பயன்படுத்தி அங்கிருந்த பெண்கள் மோசமாக திட்டினர். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

அண்ணாமலை விமர்சனம்
இன்றும் உணவு கிடைக்கும் பெண்கள் பலர் நம்பி வந்த நிலையில்.. அந்த உணவு பார்சல்களை கட்சி நிர்வாகிகள் எடுத்துச்சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பெண் ஒருவர் இது தொடர்பாக கேள்வி எழுப்பும் போது.. சாப்பாடு எல்லாம் இல்லை.. கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் என்று நிர்வாகி ஒருவர் சொன்னதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. வயசான பெண்கள் பலர் போராட்டம் செய்து களைத்து போய் பின்னர் சாப்பாடு கிடைக்காமல் கோபமாக கத்திவிட்டு செல்லும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது.

பாஜக விமர்சனம்
நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவையோ பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர். திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜிவ் காந்தி, ட்விட்டரில் இந்த வீடியோவை பார்த்து, கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார். எதிர்கட்சிகார்கள் பார்த்தா என்ன நினைப்பார்கள்.. என்று இந்த சம்பவம் குறித்து அவர் கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார். இன்னும் பல நெட்டிசன்கள் இந்த வீடியோவையோ பகிர்ந்து பாஜகவை விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications