1 ரூபாய்கூட செலவில்லாமல்.. மத்திய அரசின் ரூ.5 லட்சம் சிகிச்சை.. சர்க்கரை அட்டை இருக்கா? அப்ப சூப்பர்
சென்னை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat - Pradhan Mantri Jan Aarogya Yojana) திட்டத்தின் அம்சங்கள் என்னென்ன தெரியுமா? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?
இந்தியாவில், எத்தனையோ பேர் மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.. அதுவும் நோய்வாய்ப்பட்ட நேரத்தில், போதுமான அளவு பொருளாதார வசதியும் இருப்பதில்லை.. இதனால், கடன் வாங்கி சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் வருகிறது. சில நேரத்தில் கடன்களை கூட பெற முடியாமல் போய்விடுகிறது.

மத்திய அரசு: இப்படி நெருக்கடியில் தவிப்போருக்காகவே, அவர்களுக்கு உதவிடும் வகையில் கொண்டுவரப்பட்டதே இந்த மருத்துவ காப்பீடு திட்டம்.. அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ சேவைகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2018ல் பிரதமர் மோடி கொண்டுவந்த திட்டம்தான் இந்த ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா..
இதன்படி, ஒரு குடும்பத்துக்கு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய, அரசால் முழுவதுமாக மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டம் இது என்பது சிறப்பம்சமாகும்..
வரம்புகள்: குடும்பத்தின் அளவு, வயது, பாலினம் என எந்தவிதமான வரம்புகளை வைக்காமல், மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு (inpatients) சலுகைகள் கிடைக்க இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக, கேன்சர், நீரிழிவு, இதய நோய்கள் உட்பட 26 பிரிவுகளில் 1669 மருத்துவ முறைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, இந்த திட்டத்தில் சலுகைகள் உண்டு. இந்த அட்டையை காண்பிப்பதன் மூலம், நாட்டின் பட்டியலிடப்பட்ட எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சையை பெற முடியும்.
பலன்கள்: ஆயுஷ்மான் கார்டு பெற வேண்டுமானால், உங்களுடைய செல்போன் நம்பருடன் ஆதாரை இணைக்க வேண்டும்.. பிறகு ஆயுஷ்மான் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும்.. ஒருவேளை அந்த லிஸ்ட்டில் உங்கள் பெயர் இல்லையானால், உங்களுடைய ரேஷன் கார்டு அல்லது தொழிலாளர் அட்டை கொண்டு பெயரை சேர்க்கலாம்.
வருடத்துக்கு ரூ. 1 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பங்கள் மற்றும் பிற அரசின் நலத்திட்டங்களைப் பயன்படுத்தாதவர்கள் ஆயுஷ்மான் பாரத் கார்டு 2024-க்கு தகுதியுடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். அதேபோல, இதன் கீழ் ஒரு குடும்பம் வந்தால் மட்டுமே ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் பலன்களை பெற முடியும்.
ஆவணங்கள்: எனவே, ஆயுஷ்மான் கார்டுக்கு நீங்கள் தகுதியானவரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க, 14555 என்ற எண்ணில் அல்லது ஆயுஷ்மான் செயலி மூலம் தகவலை பெற்றுக் கொள்ளலாம். ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, மற்றும் மொபைல் எண் தேவைப்படும்.
ஆயுஷ்மான் அட்டையை எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் nha.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் நுழைந்து, உங்கள் செல்போன் நம்பரை பதிவிட்டு, Verify ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- இப்போது உங்களுக்கு வரும் OTP-எண்ணை, அதை கேப்ட்சா குறியீட்டுடன் நிரப்பி Log in என்பதை கிளக் செய்ய வேண்டும்.
- பிறகு புதிய பயனாளிகளின் போர்டல் ஒன்று திறக்கும்.. அதில் திட்டத்தின் பெயர் (PMJAY), மாநிலம், துணைத் திட்டம் (PMJAY), மாவட்டம், ஆதார் மூலம் தேடி உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, தேடல் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது திரையில் தெரியும் ஆயுஷ்மான் அட்டை பட்டியலில் உங்கள் பெயர் அல்லது குடும்பத்தில் உள்ள வேறு எந்த உறுப்பினரின் பெயரையும் சரிபார்த்து கொள்ளலாம்.
- பிறகு ஆயுஷ்மான் அட்டையை எந்த உறுப்பினரின் பெயரில் உருவாக்க விரும்புகிறீர்களோ, அவருக்கு அடுத்துள்ள ஆக்ஷன் பட்டனுக்கு செல்ல வேண்டும்.
- உங்கள் பெயரில் ஆயுஷ்மான் கார்டைப் பெற விரும்பினால், உங்கள் ஆதார் நம்பரை சரிபார்த்து, ஆதார் OTP- தேர்ந்தெடுத்து E-KYC ஐ முடிக்க வேண்டும்
- இப்போது ஸ்கிரீனில் மதிப்பெண் தோன்றும், 80% ஐ விட அதிகமாக இருந்தால், உங்கள் ஆயுஷ்மான் கார்டு தானாக அங்கீகரிக்கப்பட்டதாக அர்த்தம். எனவே, கேப்சர் போட்டோ ஆப்ஷனுக்கு சென்று போட்டோவை அப்லோடு செய்ய வேண்டும்.
- புகைப்படத்தை பதிவேற்றியதுமே, புதிய வடிவம் ஒன்று திறக்கும். அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்பி, இறுதியில் "சமர்ப்பி" என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- கடைசியாக ஆயுஷ்மான் கார்டு போர்ட்டலுக்குள் நுழைந்து ஆயுஷ்மான் கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications