தீயான ஆட்டம்.. வெற்றிக்கனியை ருசித்த இந்தியா.. பலித்த பாலாஜி ஹாசன் கணிப்பு
சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது. அரங்கு நிறைந்த காட்சி என்பது போல நரேந்திரமோடி மைதானம் நிரம்பி வழிந்தது. பல கோடி மக்கள் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்த நிலையில் ஜோதிடர் பாலாஜிஹாசன் கணித்தது போல இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது நடக்கும் உலககோப்பை தொடரில் இதுவரை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தாங்கள் மோதிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தியாவானது ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி உள்ளது. பாகிஸ்தான் நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்துள்ளது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் அணிகள் தங்களின் 3 போட்டியில் விளையாடுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் தங்களின் 3வது வெற்றியை பெற போராடும் என்பதால் இன்றைய போட்டியில் சுவாரஸ்யம் அதிகமாகவே இருந்தது.

பாகிஸ்தான் அணி பவுலிங், பேட்டிங்கில் சிறந்து விளங்குகிறது. அதேபோல் இந்தியாவும் பவுலிங், பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்டவர்கள் நல்ல பார்மில் உள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பட்டு முதல் 2 போட்டிகளை மிஸ் செய்த தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் குணமடைந்து இன்றைய போட்டியில் இணைந்து விளையாடினார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளை பொறுத்தமட்டில் இரு அணிகளும் சமபலம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 50 ஓவர் உலககோப்பை போட்டியை பொறுத்தமட்டில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்றதே கிடையாது. 1975ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்த உலககோப்பைகளில் 7 முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதி உள்ளன. இதில் அனைத்து போட்டிகளிலுமே இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. இப்படி வரலாறு இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. இந்த வரலாற்றை மாற்ற பாகிஸ்தான் அணி முயற்சி செய்தும் முடியாமல் போனது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் விடாப்பிடியாக ஆடிய பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 35 ஓவர்களில் 7 விக்கெட்டை பறிகொடுத்தது பாகிஸ்தான் அணி. 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றை தொடர இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
200 ரன்களுக்குள் பாகிஸ்தானை சுருட்டி விட முயற்சி செய்தனர். அவர்களின் முயற்சி பலன் அளித்தது. 191 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது பாகிஸ்தான் அணி. இந்த நிலையில் இன்றைய போட்டியின் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாக உள்ளது என்று கணித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.

ரோ - ஹிட் ஷர்மா, கே (cool) ராகுல், ஜடேஜா,பும்ரா, குல்தீப் யாதவ், விளையாட்டை பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் ரிஸ்வான், A. ஷஃபிக்
பி. ஆஸம், எஸ். கான், எச். ரவுஃப் ஆரம்பம் முதல் முடிவு வரை பரபரப்பாகவே இருக்கும். குறைந்தபட்சம் இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்புகள் உள்ளன. ரோஹித் ஜாதகம் பாபர் ஜாதகத்தை விட நன்றாகவே உள்ளது என்று கணித்திருந்தார் பாலாஜி ஹாசன்.
ஜோதிடர் பாலாஜி ஹாசனின் கணிப்பு பொய்யாகவில்லை. கேப்டன் ரோஹித் ஆரம்பம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். சுப்மன் கில் விறுவிறுப்பாக ஆடினாலும் விக்கெட்டை வந்த வேகத்தில் பறிகொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். அதே நேரத்தில் தன்னை நோக்கி வந்த பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டார், பவுண்டரிகளுக்கு விரட்டினார் ரோஹித் சர்மா.
கோலி எதிர்பாராமல் ஆட்டமிழக்கவே, ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். ரோஹித் , ஷிரேயாஸ் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியே ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்று எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பாராத விதமாக லட்டு போல கேட்ச் கொடுத்து 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. அவருக்கு பின் களமிறங்கிய ராகுல் கூலாக ஆடினார். காரணம் 36 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவையாக இருந்தது. கைவசம் 25 ஓவர்களுக்கு மேல் இருந்தது. பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கையும் கைவசம் இருந்தது. மெதுவாக பொறுமையாக ஆடினாலும் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி பாகிஸ்தானை வென்றது. மொத்தத்தில் பாலாஜி ஹாசன் கணித்தது போலவே ரோஹித் ஜாதகம் அபாரம்தான்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications