Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக உணவு தினம்.. அன்னதோஷம் உங்க ஜாதகத்தில் இருக்கா? பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச உணவு தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் உணவின் அருமை பற்றியும், உணவை வீணடிப்பதால் ஏற்படும் அன்னதோஷமும், அதனால் அன்ன துவேசமும் உண்டாகும் என்பது பற்றியும், சர்வதேச உணவு தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் உணவின் அருமை பற்றியும், உணவை வீணடிப்பதால் ஏற்படும் தோஷங்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. அன்னையோடு அறுசுவை உண்டிருப்போம் என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் வீட்டிலிருக்கும் வரை நமக்கு நம் அன்னையிடும் உணவின் அருமை தெரிவதில்லை. ஆனால் வேலைக்காகவோ படிப்பிற்காகவோ வெளியூர் சென்று தங்க நேர்ந்தால் வீட்டு சாப்பாட்டின் அருமையும் அம்மாவின் பெருமையும் தெரியும். தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது.

World food day 2023: Dont waste Food Anna dhosam and astrological remedies

சிலருக்கு உணவு அபரிமிதமாக கிடைக்கும். அளவுக்கு அதிகமாக கிடைக்கும் உணவை வீணாக்குவார்கள். அதே நேரத்தில் சிலருக்கு ஒருவேளை சாப்பிடக்கூட உணவு கிடைக்காது. உணவு கிடைப்பதும் அதை வீணாக்குவதும், உணவு கிடைக்காமல் போவதற்கும் கூட ஜாதக கட்டமும் அதில் உள்ள கிரகங்களும் முடிவு செய்கின்றன.

பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுக்கவே வள்ளலார் அணையாத அடுப்பு அமைத்து அன்ன சத்திரம் கட்டியுள்ளார். இந்த உலகத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச உணவு தினம் கொண்டாடப்படுகிறது. பசி என்பது ஒரு பிணி... பசி கொடுமையானது குழந்தை பருவத்திலும் முதுமையிலும் வரவே கூடாது. ஒருவரின் வயிறு நிறைய சோறு போட்டால் போதும் அவர்கள் மனதார வாழ்த்துவார்கள் எனவேதான் அன்னதானத்தின் அருமையைப் பற்றி முன்னோர்களும் ஞானியர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் மஹாளய பட்ச காலத்தில் அன்னதானம் கொடுக்க வேண்டும் என்றும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்று சொல்வதும் கூட பசியோடு இருப்பவர்களின் வயிறை குளிர வைக்க வேண்டும் என்பதற்காகக்தான். ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வதும் உணவின் அருமை பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

ஜோதிடத்தில் அன்னம் எனப்படும் உணவிற்கான காரக கிரகம் சந்திரன். அன்னை எனப்படும் மாத்ருகாரகனும் சந்திரனேதான். நமக்கெல்லாம் படியளக்கும் அன்னபூரணியான பார்வதியை வணங்கும் காரக கிரகமும் சந்திரனேதான். இன்னும் சொல்லப்போனால் ஸ்ரீ மகாலக்ஷமியை கூட சந்திர சகோதரிதான் காரணம் இருவரும் பாற்கடலில் இருந்து வந்தவர்தான். அன்பு போன்ற உணர்ச்சிகளைக் குறிக்கும் கிரகமும் சந்திரனேதான்.
உலக உணவு தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் உணவின் அருமை பற்றியும் ஜோதிடப்படி ஒருவருக்கு அன்ன தோஷமும் அன்ன துவேஷசமும் எப்படி ஏற்படும் என்று பார்க்கலாம்.

வயதானவர்கள், கர்ப்பிணிகள் வந்து பசி என்று பிச்சை கேட்கும் போது அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களை அன்னதோஷம் பாதிக்கிறது. பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்குப் புசிப்பதற்கு எதுவும் கொடுக்காதவர்களையும், வீட்டிலோ, பந்தியிலோ சாப்பிட அமர்ந்தவர்களைக் கோபித்துக்கொண்டு அவர்களை எழுப்பி உணவை சாப்பிட விடாமல் விரட்டி அடிப்பவர்களையும் அன்னதோஷம் பாதிக்கும்.

தன் தேவைக்கும் அதிகமாக உணவைத் தயார் செய்து வீணடிப்பவர்களை, தான் உண்டது போக ஏராளமான அன்னம் கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்களை, மற்றும் பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களுக்கும் அன்னதோஷம் ஏற்படும். சாப்பிடும் பந்தியில் நமக்கு வேண்டியவர்களுக்குத் தேவையான உணவை அளித்து மற்றவர்களைக் கவனிக்காமல் இருப்பதும் கூட அன்னதோஷம்தான். கறவை நின்ற பசு மாட்டிற்குத் தேவையான உணவு அளிக்காதவர்களை அன்னதோஷம் பீடிக்கும் என சாஸ்திரம் கூறுகிறது.
அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும்.

அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதுவேஷம் எனும் உணவைக் கண்டாலே வெறுப்பு உண்டாகும் நோய் ஏற்படும். இப்படி அன்னதோஷத்தாலும் அன்னதுவேஷத்தாலும் பீடிக்கப்பட்டவர்களும் அன்னாபிஷேக நாளில் அன்னாபிஷேக கோலத்தில் தரிசனம் செய்வது அன்னதோஷம் நீங்கும். மேலும் உணவின் மீது வெறுப்படைய செய்யும் நோயான அன்னதுவேஷம் நீங்கும்.

ஜோதிடத்தில் அடிப்படை உணவின் காரகர் சந்திர பகவான் ஆவார். சுவையான உணவு வகைகளின் காரகர் சுக்கிரன் ஆவார். உணவினை குறிக்கும் போஜன ஸ்தானம் எனப்படுவது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவமான ரிஷபம் மற்றும் ஜாதக இரண்டாம் பாவமாகும். ரிஷபத்தில் சந்திரன் உச்சம் அடைவதும் சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதும் குறிப்பிடத்தக்கது. கால புருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபத்திலும் உணவை குறிக்கும் சந்திரனின் ஆட்சி வீடான கடகத்திலும் அசுப கிரகங்கள் நிற்க அஞ்சாமல் உணவுப்பொருட்களை வீணடிப்பார். சந்திர பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆறாமிடம், எட்டாமிடம் 12ஆம் இடம் தொடர்புகள் பெற்றோ அல்லது பாதகாதிபதி தொடர்பு பெற்று அல்லது நீசமடைந்து நிற்க அவர்களுக்கு பால், தயிர், அரிசி சோறு போன்ற பொருட்களை அடிக்கடி வீணடிப்பதால் அன்னதோஷம் ஏற்படும்.

உணவுப்பொருட்களைக் குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருவரையும் குறிக்கும் ஸ்ரீ அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுப்பாடின்றி கிடைக்கும். உலகத்துக்கே படியளந்துவிட்டு படியை தலையில் வைத்துப் படுத்திருக்கும் சுக்கிர ஸ்தல மூர்த்தி ஸ்ரீரங்கநாதரை வணங்கிவர உணவு வீணாவது குறையும்.

ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்குத் தேவையான சந்திரனின் காரகம் பெற்ற பச்சரிசி வாங்கி கோயிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்துபேருக்கு சாப்பிட உணவு கொடுப்பது பரிகாரமாகும். சுக்கிரனின் அதிதேவதை மற்றும் சந்திர சகோதரியான தான்யலக்ஷமியை வணங்கிவர உணவு வீணாவது குறையும். முன்னோர்களின் திதி நாட்களில் பிராமணர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவு அளிப்பது அன்ன தோஷத்தோடு பித்ரு தோஷத்தையும் போக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+