உலகின் மிகப்பெரிய சிவலிங்கம்.. மகாபலிபுரத்தில் செதுக்கப்பட்ட லிங்கம் பீகாரில் நிறுவப்பட்டது!
சென்னை: மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் பீகாரில் வேத மந்திரங்கள் முழங்க நேற்று நிறுவப்பட்டது. 33 அடி உயரமும், 210 டன் எடையும் கொண்ட இந்த சிவலிங்கம், பீகார் மாநிலம் மோதிஹரியில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயண கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தைச் சேர்ந்த லோகநாதன் சேதுபதி, சுமார் 45 ஆண்டுகள் சிற்பக் கலையில் நிபுணத்துவம் பெற்றவர். மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவரிடம், பீகார் தலைநகர் பாட்னா அருகே கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் ஒரு கோயிலில்பிரதிஷ்டை செய்ய பிரம்மாண்ட லிங்கம் ஒன்று ஆர்டர் தரப்பட்டது. அதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெல்லையில் உள்ள குவாரியில் இருந்து 210 டன் எடை கொண்ட கருங்கல் கொண்டு வரப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளாக லோகநாதன் சேதுபதி தலைமையில், இரவு, பகலாக 30 சிற்பிகளை கொண்டு பிரம்மாண்ட சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது. மேல்புறத்தில் 72 லிங்கங்கள் வீதம், 14 அடுக்குகளில் 1008 சிறிய லிங்கங்கள் பொருத்தப்பட்டன. சிற்பம் செதுக்கும் பணிகள் முடிந்த நிலையில், வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு ராட்சத கிரேன்கள் உதவியுடன் 130 டயர்கள் கொண்ட ராட்சத டிரைலர் லாரியில் சிலை ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக இரவு நேரத்தில் மட்டும் 20 நாட்களுக்கும் மேலாக பயணம் செய்து டிசம்பர் மாதம் இந்த சிலை பீகார் சென்றடைந்தது. இந்நிலையில், இந்த சிவலிங்கம் வேத மந்திரங்கள் முழங்க நேற்று மோதிஹரியில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயண கோயிலில் நிறுவப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பார்வையிட்டார். பிறகு கோயில் வளாகத்தை பார்வையிட்ட நிதிஷ் குமார் அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பாட்னாவின் மகாவீர் மந்திர் அறக்கட்டளையால் கட்டப்படும் விராட் ராமாயண கோவில் 1,080 அடி நீளமும், 540 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். இதில் 22 சன்னதிகள், 18 கோபுரங்கள் மற்றும் 270 அடி உயர பிரதான கோபுரம் அமைக்கப்படும். ராமாயண காவியத்தை சித்தரிக்கும் காட்சிகள் சன்னதியின் சுவர்களில் பொறிக்கப்படும். கணேஷ் ஸ்தல், சிங் த்வார், நந்தி என அழைக்கப்படும் கோவிலின் நுழைவாயில்கள் மற்றும் கருவறை தூண் ஆகியவற்றின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்போது பிரம்மாண்டமான இந்த சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.
இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கல் மகேஸ்வர சிவபார்வதி கோவிலில் உள்ள சிவலிங்கம் தான் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பிற உலக சாதனைப் புத்தகங்களில் உலகின் மிக உயரமான சிவலிங்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பீகாரில் நிறுவப்பட்டுள்ள இந்த ஒற்றைக்கல் சிவலிங்கம், கிரானைட்டில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய சிவலிங்கம் என்ற பெருமையைப் பெறுகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications