3-ஆம் உலகப்போர் அச்சுறுத்தல்.. மக்களுக்கு பாதுகாப்பான 10 நாடுகள்.. எது தெரியுமா?
சென்னை: உக்ரைன் ரஷ்யா ஒரு புறம் போர் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் ஒரு புறம் மோதி வருகிறது. இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த சூழலில் மக்கள் வசிக்க பாதுகாப்பான நாடுகள் எவை என்ற பட்டியலை காணலாம்.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து 4-வது ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், தற்போது ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் தொடங்கியுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா, இந்த அதிரடி தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டதால், கோபம் அடைந்த ஈரான், அமெரிக்காவை பழி தீர்ப்போம் என்று வளைகுடா நாடுகளில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு நாடுகளாக கருதப்பட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க படைதளங்கள் மீது ஈரான் தாக்குதலை தொடர்ந்துள்ளதால் அந்த நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
பாதுகாப்பான 10 நாடுகள்
இப்படி போர் பதற்றங்களுக்கு மத்தியில், 2025 உலக அமைதி குறியீடு அறிக்கையின்படி, உலகின் பாதுகாப்பான 10 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறைந்த ஊழல், போதுமான வளங்கள் மற்றும் சீராக செயல்படும் நிர்வாக அமைப்பு போன்ற பண்புகளைக் கொண்ட நாடுகளே மிகவும் பாதுகாப்பானவை என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளை இங்கு பார்க்கலாம்.
ஐஸ்லாந்து:
1.095 என்ற உலக அமைதி குறியீட்டுடன், ஐஸ்லாந்து தொடர்ந்து 18வது ஆண்டாக உலகின் அமைதியான நாடாக நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறது. குறைந்த குற்ற விகிதம், ராணுவப் படைகள் இல்லாதது மற்றும் வலுவான சமூக நம்பிக்கை போன்றவை அதன் முதலிடத்திற்கு பங்களிக்கின்றன.
அயர்லாந்து:
1.260 GPI மதிப்பெண்ணுடன் அயர்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. அதன் ராணுவ நடுநிலைமை, வலுவான கொள்கைகள் மற்றும் குறைந்த குற்ற விகிதங்கள் அயர்லாந்தின் அமைதிக்கு பெரிதும் துணை நிற்கின்றன.
ஆஸ்திரியா:
1.294 GPI மதிப்பெண் பெற்றுள்ள ஆஸ்திரியா உலகில் 3 வது பாதுகாப்பு நாடாக விளங்குகிறது. அமைதி, அதன் நிலையான அரசியல் சூழ்நிலை மற்றும் குறைந்த அளவிலான ராணுவ மயமாக்கல் ஆகியவற்றால் இந்த இடத்தினை பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்து:
1.294 என்ற அதே மதிப்பெண்ணுடன், சுவிட்சர்லாந்து அதன் நடுநிலைமை, குறைந்த குற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
சிங்கப்பூர்:
1.357 புள்ளிகளுடன், சிங்கப்பூர் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே ஆசிய நாடாகத் தனித்து நிற்கிறது. அதன் கடுமையான சட்டங்கள், குறைந்த குற்ற விகிதங்கள் மற்றும் திறமையான நிர்வாக அமைப்பு இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
போர்ச்சுகல்:
1.371 என்ற மதிப்பெண்ணைப் பெற்றுள்ள போர்ச்சுக்கல், அதன் நிலையான அரசியல் சூழல் மற்றும் குறைந்த அளவிலான வன்முறைக்காக இப்படியலில் இடம்பிடித்துள்ளது.
டென்மார்க்:
1.393 GPI மதிப்பெண்ணைக் கொண்டுள்ள டென்மார்க்கில், நிறுவனங்கள் மீதான அதிக நம்பிக்கை மற்றும் குறைந்த குற்ற விகிதங்கள் அதன் அமைதிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
ஸ்லோவேனியா:
1.409 புள்ளிகளைக் கொண்டுள்ள ஸ்லோவேனியா, அதன் குறைந்த குற்ற விகிதங்கள் மற்றும் நிலையான அரசியல் சூழ்நிலையால் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
பின்லாந்து:
1.420 என்ற மதிப்பெண்ணுடன் 10 ஆம் இடத்தில் பின்லாந்து நாடு உள்ளது. வலுவான சமூக அமைப்புகள், குறைந்த குற்ற விகிதங்கள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக இப்பட்டியலில் பின்லாந்து நாடு இடம்பிடித்து இருக்கிறது.
இந்த பட்டியலில் தெற்காசிய நாடுகள் ஒன்று கூட இடம் பெறவில்லை பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளே அதிகம் இடம் பெற்றுள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications