உலகிலேயே யாருக்குமே இல்லாத புது வகையான ரத்தம்.. யாரிந்த கர்நாடகா கோலார் பெண்.. முதல்முறையாக அதிசயம்
சென்னை: உலகில் மருத்துவ துறையில் ஏராளமான வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் நடந்தவண்ணம் உள்ளன.. குறிப்பாக மனித குலத்துக்கு உயிர்வாழ அவசியமான ரத்த வகைகளை பற்றின படிப்புகளும், தேடல்களும் பெருகி கொண்டே வருகின்றன.. சமீபத்தில்கூட, செயற்கை ரத்தம் கண்டுபிடிக்கப்பட்டு, உலக மக்களுக்கு வியப்பை தந்திருந்தது.. இந்த செயற்கை ரத்தம் காலாவதியான ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட ஹீமோகுளோபின் (சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள புரதம்) மூலம் செய்யப்படுவதாகும். கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு இந்த செயற்கை ரத்தம் கெட்டுப்போகாமல் இருக்குமாம்.. இப்படிப்பட்ட சூழலில், மற்றொரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
சமீபத்தில், உலகிலேயே இதுவரை இல்லாத முற்றிலும் புதிய வகை ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.. பிரான்சின் தேசிய ரத்த முகமை இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தது..

புதிய வகை ரத்தம்
இந்த புதிய ரத்த வகைக்கு குவாடா நெகடிவ் அல்லது EMM-நெகடிவ் என்று பெயரிடப்பட்டுள்ளது... இதுவரை உலகிலேயே ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்த வகை ரத்தம் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.. இது மற்ற வகை ரத்தத்தை போல இல்லாமல் தனித்துவமானது.. இந்த குவாடா நெகடிவ் வகையில் EMM ஆன்டிஜென் இருக்காது. அதனால்தான், EMM நெகடிவ் என்கிறார்கள்.
இப்படி செயற்கை ரத்தம் முதல், புதிய வகை ரத்தம் வரை கண்டுபிடிப்புகள் உலகில் நடந்தவண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில், நம்முடைய இந்தியாவில் ஒரு அதிசயம் நடந்துள்ளது.
இதய அறுவை சிகிச்சை
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 38 வயதாகிறது.. இவருக்கு இதயத்தில் கோளாறு இருந்து வந்துள்ளது.. எனவே இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால், அவரது ரத்தத்தின் வகையை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை.. அப்போதுதான் மருத்துவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.. எப்பாதுமே சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலைமையில் இருக்காது.. ஆனால், வழக்கத்திற்கு மாறாக அப்பெண்ணின் ரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருந்ததாம்..
கோலார் பெண்
அப்போதுதான் பெண்ணின் ரத்தம் "ஓ,ஆர்.எச். ORH பாசிட்டிவ்" வகையை சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது.. உடனடியாக டாக்டர்கள் அந்த பெண்ணின் ரத்த மாதிரியை பெங்களூரு டி.டி.கே. ரத்த மையத்திற்கு அனுப்பி வைத்தனர்..
அங்கு செயல்பட்டு வரும் அதிநவீன இம்முனோஹெமடாலஜி ரெபரென்ஸ் ரத்த பரிசோதனை மையத்தில், பெண்ணின் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.. அப்போதும் ரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருந்துள்ளது.. இதையடுத்து, டாக்டர் அங்கித் மாதுர் ரத்தவகையை உறுதிப்படுத்தியதுடன், அந்த பெண்ணின் ரத்த மாதிரியை இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை கண்டறியும் மையத்துக்கு அனுப்பி வைத்தார்..
உலகிலேயே முதல் நபர்
இங்கிலாந்தில் 10 மாதங்களாக இதுகுறித்த சோதனை நடந்துள்ளது.. இறுதியில், அந்த பெண்ணுக்கு புதிய வகை ரத்தம் இருப்பது உறுதியாகியிருக்கிறது.. உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் இதுவென்று மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரத்த வகைக்கு (CRIB) சி.ஆர்.ஐ.பி.(கோமர் இந்தியா பெங்களூரு) என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகிலேயே இந்த வகை ரத்தம் உள்ள முதல் நபரே, இந்த கோலார் பெண் தான் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்..
கர்நாடக பெண்ணுக்கு உலகிலேயே புதிய வகை ரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. மருத்துவ துறையிலேயே அதிசயமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications