சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தலுக்கு பின் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படுமா? பரபர கேள்விக்கு கமல்ஹாசன் பதில் இதுதான்!

லோக்சபா தேர்தலுக்கு பின் காங்கிரஸ், பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலுக்கு பின் காங்கிரஸ், பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதையடுத்து அவர் தற்போது என்டிடிவி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். பத்திரிக்கையாளர் பிரணாய் ராய்க்கு அவர் அளித்த பேட்டியில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து பேசியுள்ளார்.

சினிமாவில் வருமே.. ஹீரோ ஓபனிங் சீனுக்கு பூபோடற மாதிரி.. தமிழச்சிக்கு அப்படி வரவேற்பு.. மந்தைவெளியில் சினிமாவில் வருமே.. ஹீரோ ஓபனிங் சீனுக்கு பூபோடற மாதிரி.. தமிழச்சிக்கு அப்படி வரவேற்பு.. மந்தைவெளியில்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கமல்ஹாசன் தனது பேட்டியில், நான் அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. நான் ஹே ராம் படம் எடுத்த போதே இதை நினைத்து இருந்தேன். நாட்டில் எதிர்காலத்தில் இவ்வளவு பிரச்சனைகள் நடக்கும் என்று தெரியும். ஆனால் அது நடக்க கூடாது என்று விரும்பினேன். தற்போது அது உண்மையிலேயே நடக்கிறது. ஜெர்மனியில் யூதர்களின் கேம்ப்களில் நடந்தது போல நடக்கிறது.

கோபம்தான்

கோபம்தான்

நான் அரசியலுக்கு வர என் கோபம்தான் காரணம். என் இயலாமை, மாற்றம் வேண்டும் என்ற தேவைதான் காரணம். நான் அதில்தான் கவனம் செலுத்த போகிறேன். இது வெறும் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் கிடையாது. இது நம் அடையாளத்தை முன்னிறுத்த போகும் தேர்தலாக இருக்கும்.

இல்லை

இல்லை

தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் தேசிய கட்சி கிடையாது. மாநில கட்சி. எங்களால் மூன்றாவது அணியையும் உருவாக்க முடியாது. அதனால் ஏதாவது ஒரு தேசிய கட்சிக்குத்தான் தமிழக நலனுக்காக ஆதரவு அளித்தாக வேண்டும்.

இரண்டு கட்சி

இரண்டு கட்சி

தேர்தலுக்கு பின் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைக்க எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் அரசியல் போக்கை மாற்ற வேண்டும். தமிழக பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் எங்களை அவர்களிடம் விற்க போவதில்லை. தமிழக நலனுக்காக மட்டுமே இணைய போகிறோம், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Would you join in NDA alliance after elections? MNM Kamal Haasan explains his stand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X