கோமியம் குறித்து ஸ்ரீதர் வேம்பு கூறிய கருத்து.. அதற்கு கீழேயே எக்ஸ் தளத்தில் அதிரடி பதில்
சென்னை: பசுவின் கோமியத்தை கேலி செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் குடல் பாக்டீரியாக்கள் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் மிக முக்கியமான அங்கம் என்று கூறியியுள்ளதுடன், குடல் பாக்டீரியாக்களை மீட்டெடுப்பதில் பசுவின் கோமியம் முக்கியப்பங்கு வகிப்பதாக கூறியிருந்தார். அதனை ஃபேக்ட் செக் செய்து எக்ஸ் தளத்தில் தவறு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சென்னையில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று நிகழ்ச்சி ஒன்றில் சென்னை ஐஐடி-யின் இயக்குநர் காமகோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும் போது, "என்னுடைய அப்பா ஜுரத்தில் இருந்தபோது, சன்னியாசி ஒருவர் வந்தார். கோமூத்திரம் (கோமியம்) குடிக்கச் சொன்னார். என் தந்தை குடித்ததும் 15 நிமிடத்தில் காய்ச்சல் குணமாகி விட்டது. கோமூத்திரத்தில் கிருமி நாசினிகள், ஜீரண மண்டலத்துக்கு தேவையான பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்துள்ளது" என்று காமகோடி கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு டாக்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இது முற்றிலும் தவறான தகவல் என்றும், அவரது இந்தக் கருத்து அறிவியலுக்குப் புறம்பானது என்றும், மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கவே இவை உதவும் என்றும் கூறினார்கள்.

இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் விளக்கம் அளித்த காமகோடி, "கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் சிறந்த பத்திரிகைகள் அறிவியல் சான்றுகளை வெளியிட்டிருக்கின்றன. விவசாயத்திலும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் இயற்கை வேளாண்மை மற்றும் உள்நாட்டு கால்நடை இனங்களின் பாதுகாப்பை ஆதரிக்கும் சூழலில் எனது கருத்துகள் கூறப்பட்டிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார். இதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கோமியம் குறித்துப் பேசியது சர்ச்சையானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த தமிழிசை, "மாட்டின் கோமியத்தை 'அமிர்த நீர்' என்று கூறியிருக்கிறார்கள். மாட்டின் சாணத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்றால் கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. மாட்டின் கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து என்று கூறியுள்ளனர். இது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
கோமியம் 80 வகையான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் ரீதியாகத் தொழில்நுட்ப ரீதியாக ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை வழிநடத்துபவர் (காமகோடி) சும்மா கூறுவாரா...? 'என் உணவு என் உரிமை' என்று கூறும் நீங்கள்.. விஞ்ஞான பூர்வமாகக் கோமியம் மருந்து என்று கூறுவதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.. இவர்களுக்குக் கோமியம் குடிப்பதில் பிரச்னையில்லை, டாஸ்மாக்கில் குடிப்பதில் குறைந்துவிடுமோ எனப் பயம். மாட்டுக்கறி சாப்பிடுவாங்களாம் ஆனால், விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு மருந்து எனச் சொல்லப்படுகிற மாட்டின் கோமியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம்" இவ்வாறு தமிழிசை கூறியிருந்தார். எனினும் தமிழிசையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஒரு டாக்டர் இப்படி பேசலாமா என்று டாக்டர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழிசை பேசுவது தவறான தகவல் என்றும் கூறுகிறார்கள்..
இந்நிலையில் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கோமியத்திற்கு ஆதரவாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பசுவின் கோமியத்தை கேலி செய்பவர்கள் மல மாத்திரைகள் மற்றும் மல மாற்று அறுவை சிகிச்சைகள் குறித்த அறிவியலை விளக்கி இருந்தார். மேலும் அதனை ஏற்பவர்கள் கோமியத்தை கேலி செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். கோமியம், நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாவை மீட்டெடுப்பதில் பங்கு உள்ளதாகவும், குடல் பாக்டீரியா நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் மிக முக்கியமான அங்கம் என்றும் அவை நம்முடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறியிருந்தார். மேலும் "பசு கோமியம் பசு சாணமும் நன்மை பயக்கும் பண்புகளைக் கொண்டிருக்கிறது" என்பது ஒரு மூடநம்பிக்கை அல்ல. நவீன அறிவியல் அதில் வளர்ந்து வருகிறது. என்றார்.
இதனிடையே ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ள படி, மல மாற்று மாத்திரைகள், மல மைக்ரோபயோட்டா மாற்று (FMT) மாத்திரைகளை பொதுவாக "மல மாத்திரைகள்" என்றும் அழைக்கிறார்கள். அவை உறைந்த உலர்ந்த மலப் பொருளைக் கொண்ட மாத்திரைகள் ஆகும். குடல் பாக்டீரியாவின் இயற்கையான சமநிலையை மீட்டெடுப்பதன் மூலம் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க அவை பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு பசு கோமியம் குறித்து கூறிய கருத்தை ஃபேக்ட் செக் செய்துள்ள எக்ஸ் தளவாசிகள், மல மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப்பிட்ட அளவில் நிரூபிக்கப்பட்ட நன்மைகளைக் கொண்ட மருத்துவ முறை என்றும், இது மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்கள்.. அதேநேரம் மாட்டின் கோமியத்தை (சிறுநீர்) குடிப்பது எந்த அறிவியல் அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை என்றும் இதில் மக்களை தவறாக வழிநடத்துவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறியுள்ளார்கள். மேலும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) பசுவின் சிறுநீரில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால், அது நேரடியாக மனிதர்கள் உட்கொள்ள ஏற்றதல்ல என்று தெரிவித்துள்ளதையும் எக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications