Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேற வீடியோ?.. "மேட்டரை" உடைத்த யாஷிகாவின் ஆண் நண்பர்.. "நாங்க அங்கே தான் போனோம்".. பரபர வாக்குமூலம்

யாஷிகா ஆனந்தின் ஆண் நண்பர் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: யாஷிகாவின் வீடியோவில் உண்மைதன்மை இல்லை என்கிறார்கள் போலீசார்.. விபத்து நடந்ததற்கு முக்கியமான காரணம், அதிவேகமாக காரை ஓட்டியது என்று மாமல்லபுரம் போலீசார் விளக்கம் தந்துள்ளனர்.

நடிகை யாஷிகா ஆனந்த், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரிக்காடு என்ற இடத்தில் அதிவேகத்தில் கார் ஓட்டி செல்லும்போது கார் நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரை சேர்ந்த அவரது தோழி வள்ளிசெட்டி பவனி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

யாஷிகா

யாஷிகா

காரின் பின்சீட்டில் யாஷிகாவின் நண்பர்கள் 28 வயது சையத், 29 வயது அமீர் போன்றோர் காயத்துடன் உயிர் தப்பினார்கள்... இப்போது யாஷிகா ஆனந்த் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ளார்.. அதேபோல, சையத், அமீர் 2 பேரும் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர்..

 சீட் பெல்ட்

சீட் பெல்ட்

முதல் கட்ட விசாரணையில் ஆண் நண்பர்கள் 2 பேரும் சீட் பெல்ட் அணிந்து பின் சீட்டில் பயணம் செய்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பி உள்ளனர்.. யாஷிகா ஆனந்த் சீட் பெல்ட் போடக்காணோம்... அவரது தோழியும் சீட் பெல்ட் போடக் காணோம்.. இந்த விபத்தானது பல சந்தேகங்களை எழுப்பி வந்தது.. அதேபோல, கார் ஓட்டும்போது யாஷிகாவின் வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை கூட்டி இருந்தது..

விளக்கங்கள்

விளக்கங்கள்

இந்நிலையில், விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் சில விளக்கங்களை தந்துள்ளனர்.. யாஷிகா புதுச்சேரிக்கே செல்லவில்லையாம்.. அவர் சென்றது மாமல்லபுரம்.. அங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு திரும்பி வரும்போதுதான் விபத்து நடந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு விஷயம், இந்த விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்கிறார்கள் போலீஸார்.. 2 வருஷத்துக்கு முன்பு கர்நாடகாவில் நடந்த விபத்தின் சிசிடிவியை யாஷிகா விபத்தில் சிக்கிய சிசிடிவி என சிலர் தவறாக பரப்பி வருவதாகவும் கூறியுள்ளனர்.

 வள்ளி ஷெட்டி

வள்ளி ஷெட்டி

அதேபோல, யாஷிகாவின் தோழி வள்ளி ஷெட்டியும், காரின் சன்ரூஃப்பை திறந்து வைத்து கொண்டே பயணித்ததாகவும், அப்போது அவருடைய டிரஸ், காரை ஓட்டி வந்த யாஷிகாவின் முகத்தில் விழுந்ததால்தான் வழிதெரியாமல் தடுமாறி, கார் தறிகெட்டு போனதாகவும் செய்திகள் வருவதையும் போலீசார் மறுத்துள்ளனர்.. அதாவது, யாஷிகா கார் ஓட்டும்போது கை தட்டியதால் விபத்து நிகழவில்லை, அவரது தோழியின் டிரஸ், யாஷிகாவின் முகத்தின் மீது பட்டதாலும் விபத்து நிகழவில்லை..

கேமரா

கேமரா

இந்த விபத்து முழு காரணம், அளவுக்கு அதிகமாக வேகத்தில் காரை ஓட்டியது மட்டும்தான் என்று போலீசார் விளக்கம் தந்துள்ளனர். இதற்காக போலீசார் ஒரு முயற்சி எடுத்துள்ளனர்.. ஈசிஆர் சாலையில் சிசிடிவி கேமரா உள்ள இடத்தில் இருந்து, விபத்து நடந்த இடம்வரை காரை வேகமாக இயக்கி உள்ளனர்.. அந்த நேரத்தை கணக்கிட்டுதான், எவ்வளவு ஸ்பீடில் காரை யாஷிகா ஓட்டி இருக்கிறார் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

 ஆண் நண்பர்

ஆண் நண்பர்

அதேபோல, யாஷிகாவுடன் பயணித்த ஆண் நண்பர்களின் பெயர்களை போலீசார் வெளியிட்டிருந்தார்களே தவிர, யார் அவர்கள், அவர்களின் பின்னணி என்ன? இவர்கள் ஏன் யாஷிகாவுடன் பயணித்தார்கள்.? அந்த ஆண் நண்பர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்படவில்லையே என்பது போன்ற சந்தேகங்களும் எழுந்தன.. இதில் ஒரு ஆண் நண்பரிடம் போலீசார் விசாரித்து உள்ளனர்.. அவரிடம் வாக்குமூலமும் பெற்றுள்ளனர்..

 வாக்குமூலம்

வாக்குமூலம்

புதுச்சேரிக்கு போகவில்லை என்றும், மாமல்லபுரத்தில் உணவு சாப்பிட்டு மட்டுமே திரும்பி வந்ததாகவும் வாக்குமூலம் தந்துள்ளார்.. மேலும் யாஷிகா காரை அதிகமாக ஓட்டினார் என்றும், இரவு 11 மணிக்கு அந்த விபத்து நடந்ததாகவும் அந்த ஆண் நண்பர் தெரிவித்துள்ளார்.

விசாரணை

விசாரணை

வேகமாக காரை ஓட்டியதால்தான் விபத்து ஏற்பட்டது என்று ஏற்கனவே யாஷிகாவும் போலீசாரிடம் கூறியிருந்தார்.. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான், யாஷிகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. முதல் தகவல் அறிக்கையின் விவரங்களும் வெளியாகி உள்ளது.. இனிதான் அடுத்தடுத்த விசாரணையில் போலீசார் முன்னெடுப்பார்கள் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+