Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவங்க அனுமதி இல்லாம உங்களால ஏதாவது செய்ய முடியுமா? “நல்ல காமெடி”.. அண்ணாமலை மீது காயத்ரி அட்டாக்!

தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை ஒரு காமெடி என காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : "டெல்லியை பார்த்து பயப்படவில்லை என தமிழில் பேசுவது போல், ஆங்கிலத்திலோ இந்தியிலோ தேசிய செய்தி சேனல்களில் அதே விஷயத்தைப் பேசுவதற்கு தைரியம் இருக்கிறதா?" என மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, அண்மையில் அக்கட்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் பாஜக கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வரும் சூழலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நான் தலைவன், என்னை டெல்லி மாற்றிவிடும் என்ற பயத்தில் முடிவு எடுக்காமல் இருக்க மாட்டேன் எனச் சீறியிருந்தார் அண்ணாமலை. இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

டெல்லி மற்றும் ஆர்எஸ்எஸ் அனுமதி இல்லாமல் கட்சியில் யாரையும் நியமிக்க முடியாது, டெல்லி ஆதரவு இல்லாமல் கூட்டணி பேச முடியாது என்பதை அண்ணாமலை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

 அதிமுகவுக்கு தாவும் பாஜகவினர்

அதிமுகவுக்கு தாவும் பாஜகவினர்

பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பாஜக ஐடி விங் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து பாஜக ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன், சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி விங் நிர்வாகிகள் என பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக - பாஜக இடையிலான மோதல் தற்போது முற்றி உள்ளது. பாஜகவினர் அதிமுகவில் இணைந்தது பற்றி காட்டமாகப் பேசிய அண்ணாமலை, "பாஜகவினரை இழுத்தால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும்" எனத் தெரிவித்தார்.

 நான் தலைவன்

நான் தலைவன்

மேலும், நான் தமிழ்நாட்டில் தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. நான் அரசியல் செய்ய வந்து இருக்கிறேன். பாஜகவை முன்னேற்ற வந்து இருக்கிறேன். அதைச் செய்வேன். கருணாநிதி, ஜெயலலிதா போல முடிவு எடுப்பேன். நான் தலைவன்.. நான் யாருக்கும் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன். என்னை டெல்லி மாற்றிவிடும் என்ற பயத்தில் முடிவு எடுக்காமல் இருக்க மாட்டேன். தமிழ்நாட்டில் பாஜக அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது" எனத் தெரிவித்தார். இதனை அண்மையில் அண்ணாமலையை குற்றம்சாட்டி பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

ஜால்ரா அடிக்க

ஜால்ரா அடிக்க

காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், "அண்ணாமலை நீங்கள் யாரையும் மேனேஜராகவோ அல்லது தலைவராகவோ ஆக்கத் தேவையில்லை. அனைவரும் சுயமாக உருவாக்கப்பட்டவர்கள். உங்களுக்கு ஜால்ரா அடிக்க யாரையேனும் தலைவராக உருவாக்க தேவை இல்லை. முதலில் சென்று பூத் வேலை, களப்பணி செய்து தமிழ்நாட்டின் அடிமட்டத்தை அடையுங்கள். டெல்லி அனுமதியோ ஆர்எஸ்எஸ் அனுமதியோ இல்லாமல் உங்களால் கட்சியில் ஒரு கழுதையை கூட நியமிக்க முடியாது. டெல்லி ஆதரவு இல்லாமல் கூட்டணி பேசக்கூட முடியாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். டெல்லி உங்களைப் பார்த்து பயப்படுவது போல் நீங்கள் பேசுவது, தமிழ் செய்தி சேனல்களில் நீங்கள் டெல்லியை பார்த்து பயப்படவில்லை என தமிழில் பேசுவது போல், ஆங்கிலத்திலோ இந்தியிலோ தேசிய செய்தி சேனல்களில் அதே விஷயத்தைப் பேசுவதற்கு தைரியம் இருக்கிறதா?

சேறு

சேறு

மேலும் 20-30 வருடங்களாக கட்சியில் பணியாற்றியவர்களை சேறு என்று கருத்து சொல்வது முட்டாள்தனமான விஷயம். மோடி, அமித்ஷா மற்றும் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வருகிறார்கள். அவர்களை ஒரு சேறு என்று அழைக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் மற்றும் பாஜக கட்சிக்கும் நீங்கள் ஒரு பெரிய நகைச்சுவை." என விமர்சித்துள்ளார். செந்தாமரை மீது ஒட்டிய சேறு என பாஜகவினர், சிடிஆர் நிர்மல் குமார் விலகலை விமர்சித்த நிலையில் இவ்வாறு விமர்சித்துள்ளார் காயத்ரி.

சவாலுக்கு ரெடியா

சவாலுக்கு ரெடியா

மேலும் மற்றொரு பதிவில் காயத்ரி ரகுராம், "அண்ணாமலை ஊழல் செய்யாதவராக இருந்தால், தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக ஆனதில் இருந்து அவர் தனது சொந்த டிரஸ்ட்டில் செய்யப்பட்ட டெபாசிட்கள், பரிவர்த்தனைகளை வெளிப்படையாக ஊடகங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு காட்டுவாரா? வாட்ச் பில் உடன்.. அவர் இந்த சவாலுக்கு ஒப்புக்கொள்கிறாரா? ஊழல், கமிஷன், வசூல் என்பது இங்கு பெரும் கேள்வியாகி வருகிறது.

யூடியூப் சேனல்களுக்கு பணம்

யூடியூப் சேனல்களுக்கு பணம்

மாநிலத் தலைவரான பிறகு அண்ணாமலை மூலம் எத்தனை யூடியூப் சேனல்களுக்கு நிதியளிக்கப்படுகின்றன? எத்தனை ஊடகங்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது? மாநிலத் தலைவரான பிறகு சமீப காலத்தில் எத்தனை நிறுவனங்களில் அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டுள்ளன? அவரது வருமானம் என்ன? ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 4 ஆடுகளை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வளவு பேருக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? என்பதே இன்றைய மக்களின் கேள்வி." எனக் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+