சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெரினாவில் என்னாகும் தெரியுமா? திருச்சி சூர்யா பேசுவதாக லீக்கான ஆடியோ! நோட்டமிட்ட டெல்லி.. சிக்கல்?

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக ஓபிசி நலப்பிரிவு மாநில தலைவர் திருச்சி சூர்யாவின் ஆடியோ என்று சொல்லப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆடியோ தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று போலீஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.,

பாஜகவில் மைனாரிட்டி நலப்பிரிவு தலைவராக இருக்கும் டெய்சி சரணை பாஜக ஓபிசி நலப்பிரிவு மாநில தலைவர் திருச்சி சூர்யா போன் செய்து மிரட்டியதாக ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் பேசுவது சூர்யாதானா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இருப்பினும் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க சூர்யாவிற்கு 1 வாரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சூர்யா மீது விசாரணை நடத்தவும் பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு இருக்கிறார்.

தமிழ்நாடு அரசியலை அந்த குறிப்பிட்ட ஆடியோ உலுக்கி உள்ளது.

சூர்யா சிவா ஆபாச பேச்சு.. பாய்ண்டை பிடித்த திமுக! கையை வெட்டாதீங்க - அண்ணாமலை, குஷ்புவிடம் கேள்விசூர்யா சிவா ஆபாச பேச்சு.. பாய்ண்டை பிடித்த திமுக! கையை வெட்டாதீங்க - அண்ணாமலை, குஷ்புவிடம் கேள்வி

சிலரின் பெயர்கள்

சிலரின் பெயர்கள்

சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் சூர்யா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. அதோடு சில பாஜக தலைவர்களின் பெயர்களும் இதில் அடிபடுகிறது. நீ எப்படி பதவி வாங்குன என்று தெரியும் என்று கூறி, அதோடு பாஜக தலைவர் ஒருவரின் பெயரும் அடிபட்டு உள்ளது. அதேபோல் நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது, என்று கூறி உள்ளார்.

மெரினா

மெரினா

மேலும் மெரினாவில் என்ன நடக்கும் தெரியுமா என்று கூறி அதன் பின் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி டெய்சி மிரட்டப்பட்டு உள்ளார். இதில் டெய்சிக்கு சூர்யா கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. டெய்சி சென்னையை சேர்ந்த மருத்துவர். இவர் சமீபத்தில்தான் பாஜகவில் இணைந்தார். அதையடுத்து பாஜகவில் அவருக்கு மைனாரிட்டி நலப்பிரிவு தலைவராக மாநில பொறுப்பு கொடுக்கப்பட்டது.

ஆடியோ

ஆடியோ

இந்த ஆடியோ தற்போது பாதிதான் வெளியாகி உள்ளது. இந்த உண்மையான ஆடியோ 6 நிமிடத்திற்கும் அதிகமான நீளம் கொண்டது என்று கூறப்படுகிறது. கடைசி 2 நிமிடங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கு முன் உள்ள 4 நிமிட ஆடியோ வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் அந்த ஆடியோ வெளியானால் அது பெரிய சிக்கல் ஆகும் என்கிறார்கள். முதல் பாதி ஆடியோ வெளியானால், அதில் வேறு சிலரின் பெயரும் சிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு உள்ளார்.

பாஜக கமிட்டி

பாஜக கமிட்டி

பாஜக ஒழுங்கு கமிட்டி சார்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். ஆனால் பெண் ஒருவரை மோசமாக திட்டிய, கொலை செய்ததாக மிரட்டிய குற்றச்சாட்டு உள்ள ஒருவருக்கு வெறும் 1 வாரம் மட்டுமே கட்டுப்பாடு விதிப்பது என்ன நியாயம் என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் யூ டியூபில் பேச கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பாஜக செய்தி தொடர்பாளர்கள் மட்டுமே யூ டியூபில் பேச அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. மற்றவர்கள் பேச ஆசைப்பட்டால் அவர்கள் கட்சி தலைமையின் அனுமதியை பெற வேண்டும் என்று அண்ணாமலை உத்தரவிட்டு இருக்கிறார்.

போலீஸ் நடவடிக்கை

போலீஸ் நடவடிக்கை

இது சூர்யா என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. இன்னொரு பக்கம் இந்த விவகாரம் பாஜகவிற்கு அதிக நெருக்கடியை கொடுத்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜகவை பூத் ரீதியாக வலுப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் பாஜக தேவையில்லாத சர்ச்சையில் சிக்கி உள்ளது. காயத்ரி வேறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் விவகாரம் தற்போது டெல்லி வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் மேலிடத்தில் இருந்து முக்கிய உத்தரவுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
You will what happen in Marina: Why the alleged Trichy Surya audio caught Delhi BJP eyes?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X