செங்கல்பட்டு சம்பவத்தில் ட்விஸ்ட்! "காதலனை பழிவாங்க நாடகம் நிகழ்த்திய காதலி.." விசாரணையில் பகீர்
சென்னை: செங்கல்பட்டு அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தன்னுடன் நெருங்கிய பழகிய காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் காதலனை பழிவாங்க இளம்பெண் நாடகம் ஆடியது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நள்ளிரவு 2 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டை தட்டிய இளம்பெண் தன்னை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார்.
செங்கல் பட்டு ரயில் நிலையத்தில் இருந்து காரில் கடத்தி மாம்பாக்கம் பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டதாக கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த வீட்டில் இருந்த பெண் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்டதாக கூறிய இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக செங்கல் பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். செங்கல்பட்டு இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக இளம் பெண் அளித்த புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இளம் பெண் அளித்த புகாரையடுத்து துரிதமாக ஆக்ஷனில் போலீசார் இறங்கினர். சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு செங்ல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இளைஞர் ஒருவருடன் பைக்கில்..
தொடர்ந்து அந்த இளம் பெண்ணிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினர். அதில், புகார் கூறிய பெண் பெரம்பலூர் மாவட்டதை சேர்ந்தவர் என்பதும் சென்னையில் உள்ள கால்சென் டர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. 4 பேர் கொண்ட கும்பல் தன்னை காரில் கடத்தியதாக இளம்பெண் கூறியதால் செங்கல்பட்டு பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் புகார் அளித்த இளம்பெண் இளைஞர் ஒருவருடன் பைக்கில் சென்றது தெரியவந்தது.

திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தல்
இதனால், பெண் அளித்த தகவலுக்கு மாறாக இருந்ததால் போலீசாருக்கு சம்பவம் குறித்து சந்தேகம் எழுந்தது. பெண்ணிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. இது குறித்து போலீஸ் தரப்ப்பில் கூறபட்டதாவது:- அந்த இளம்பெண்ணும் உத்திர மேரூரை அடுத்த சலீம் என்கிற பிரகாஷ் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். நேற்றும் பிரகாஷும் அந்த இளம்பெண்ணும் மாம்பாக்கம் பகுதியில் தனிமையில் சந்தித்து உள்ளனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரகாசிடம் இளம்பெண் வலியுறுத்தி இருக்கிறார்.

காதலனை கைது செய்த போலீசார்
ஆனால், இதற்கு பிரகாஷ் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பிரகாஷ் அந்த இளம்பெண்ணை தாக்கி விட்டு சென்றுள்ளார். தன்னுடன் நெருங்கி பழகிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கோபம் அடைந்த அந்த இளம்பெண் தன்னை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக நாடகம் ஆடி இருக்கிறார். இதையடுத்து பெண்ணின் காதலனான பிரகாஷை கைது செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர். காதலனை மாட்டிவிடுவதற்காக இளம்பெண் நாடகம் ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications