தேவியின் திருவிளையாடல்கள்.. சொல்ல சொல்ல.. அதிர்ந்து போன போலீஸ்.. 24 வயசிலேயே இப்படியா!

போலீசில் கைதாகி உள்ள தேவி என்ற பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தேவியின் அசால்ட் வாக்குமூலம் .... சொல்ல சொல்ல.. அதிர்ந்து போன போலீஸ்

    சென்னை: "என் புருஷன் வீட்டை பார்த்துப்பார்.. நான் விதவிதமா டிரஸ் போட்டுப்பேன்.. சீரியல் நடிகைகள் போடுவாங்களே, அந்த மாதிரி.. எல்லாமே காஸ்ட்லி டிரஸ்தான்.. அப்பறம் வீட்டிலிருந்து கிளம்பி ரயிலில் ஏறி தினமும் திருட ஆரம்பிச்சிடுவேன்" என்று வாக்குமூலம் தந்து போலீசாரை அதிர வைத்துள்ளார் 24 வயது தேவி!

    சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் உள்ள எழும்பூர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, பூங்கா ரயில் நிலையங்களில் அடிக்கடி பயணிகளின் செல்போன், பணம் திருடு போவதாக எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    அதனால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது யார் என கண்டறிய முற்பட்டனர். அப்படி 10 நாளைக்கு முன்பு சிக்கியவர்தான் தேவி.

    சந்தேகம்

    சந்தேகம்

    செங்கல்பட்டு நோக்கி செல்லும் எலக்ட்ரிக் ரயில் ஒன்று பூங்கா ஸ்டேஷன் வந்தது. அந்த ரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த தேவி மீது போலீசாருக்கு சந்தேகம் வரவும், அழைத்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் தேவி முன்னுக்குப் பின் முரணாக பேசவும், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    ஏழுமலை

    ஏழுமலை

    சொந்த ஊர், ஜோலார்பேட்டை என்பதும், கணவர் பெயர் ஏழுமலை என்பதும் 4 வயதில் குழந்தை இருப்பதும் தெரியவந்தது. தேவிக்கு திருடுவதுதான் முழு நேர வேலை.. அவரிடம் சோதனை செய்தபோது, பயணிகளிடம் இருந்து அன்றைய தினம் ஆட்டைய போட்டிருந்த 8 பவுன் நகைகள் மற்றும் 46 ஆயிரம் ரூபாய் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தேவியையும் கைது செய்து புழலில் அடைத்தனர். பின்னர் தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது தேவி அளித்த வாக்குமூலம் இதுதான்:

    குடும்பம்

    குடும்பம்

    "நான் பெரிசா படிக்கல.. என் புருஷன் எந்த வேலைக்கும் போக மாட்டார்.. குடும்பத்தை எப்படி நடத்தறதுன்னு தெரியல.. வேலை தேடி நிறைய முயற்சி பண்ணியும் எனக்கு கிடைக்கல.. அப்பதான், பிழைப்பு தேடி ரயிலில் சென்னை வந்தேன். ரயிலில் ஒரு பெண் தூங்கி கொண்டிருந்தார். நைஸாக அவர் நகைகளை கழற்றினேன்.. அதை வித்து நாங்கள் சாப்பிட்டோம்.. அப்பறம்தான் ரயிலிலேயே திருட ஆரம்பித்துவிட்டேன்.

    திருடுவேன்

    திருடுவேன்

    வேலைக்கு போவது போல காலைலயே கிளம்பிடுவேன்.. கூட்ட நெரிசலா இருக்கும் ரயிலில் ஏறி கொள்வேன்.. பெண்களை நோட்டமிடுவேன்.. தினமும், 2 பேர்கிட்டயாவது திருடிடுவேன்.. செல்போன், நகை, பணம், எதுவானாலும் சரி, அதை திருடி உடனுக்குடனே வித்திடுவேன்.. ஒருமுறை நான் திருடும்போது மாட்டிக்கிட்டேன்.. ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு வந்துட்டாங்க.. அப்போ எனக்கு அசிங்கமா இருந்தது.. ஆனா அதுவே பழகிடுச்சு.

    வித வித டிரஸ்

    வித வித டிரஸ்

    என் புருஷன் வீட்டில் இருந்து குழந்தையை கவனிச்சுப்பார்.. நான் காலைலயே திருட வந்துடுவேன்.. இதனால் நிறைய பணம் என் கையில் புழங்கியது.. விதவிதமா டிரஸ் போட்டுப்பேன்.. சீரியல் நடிகைகள் போடும் டிரஸ்கள் எனக்கு பிடிக்கும்... எவ்வளவு விலையா இருந்தாலும் அதை வாங்கி போட்டுப்பேன்... இந்த மாதிரி காஸ்ட்லி டிரஸ் போடும்போது, ரயிலில் என் மேல யாருக்குமே சந்தேகமும் வராது. இது திருடுவதற்கு வசதியாக இருந்தது.

    பறிமுதல்

    பறிமுதல்

    எங்க ஊர்ல கூட நான் சென்னையில எங்கியோ ஒரு ஆபீஸ்ல வேலைக்குதான் போய்ட்டு வரேன்னு நம்பிட்டாங்க.. யாருக்குமே நான் திருடறது கைதாகிற வரை தெரியாது.. ஆனா என் மேல 57 திருட்டு கேஸ் இருக்கு. இதில 43 வழக்குகள் நகை திருட்டு தான்.." என்றார். பங்களா டைப் போல இருக்கும் ஒரு வீட்டில்தான் தேவி குடியிருந்து வந்துள்ளார்... இப்போதைக்கு 70 சவரன் தங்க நகைகள், 77,500 ரூபாய் ஆகியவற்றை தேவியிடம் பறிமுதல் செய்துள்ளனர். இனி தொடர்ந்து தேவியிடம் விசாரணை நடக்கும் என தெரிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+