நான் திருடன் கிடையாது சார்.. ஆனா ஆளை வெட்டுவேன்.. அதிர வைத்த நாகராஜ்!
சென்னையில் இளம் ரவுடி பட்டா கத்தியுடன் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: "சார்.. நான் கொள்ளை எல்லாம் அடிக்கிறவன் இல்லை.. ஆட்களை வெட்டுவேன்.. அவ்வளவுதான்" என்று போலீசாரிடம் தைரியமாக சொல்கிறார் இந்த இளம் ரவுடி!
சென்னை எருக்கஞ்சேரி ஐயப்பா தியேட்டருக்கு அருகில் டிராபிக் எப்போதுமே நெரிசலாக இருக்கும். அதனால் போலீசாரும் வழக்கம்போல் வாகனசோதனையில் நேற்று பிசியாக இருந்தனர்.
அப்போது அந்த வழியாக 2 பேர் பைக்கில் வேகமாக வந்தனர். ஹெல்மெட் போடாமல் இருந்தனர். அவர்களின் வண்டியை நிறுத்துமாறு சைகை காட்டினர். போலீசாரை பார்த்தும், பைக்கை நிறுத்தாமல் வேகமாக பறந்தனர்.

போலீசார்
இதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசாரும், பைக்கை விரட்டி சென்று மடக்கி அவர்களை பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இன்னொருவர் சிக்கினார். பெயர் நாகராஜ், வயசு 18தான் என்பது தெரியவந்தது. சென்னை காவாங்கரையை சேர்ந்தவராம்.

நாகராஜ்
அவரிடம் சோதனை நடத்தியதில், பெரிய பட்டா கத்தியை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கத்தியை பார்த்ததும், கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து அவர்களிடம் போக்குவரத்து போலீசார் நாகராஜை ஒப்படைத்தனர்.

வெட்டுவேன்
பின்னர் போலீசார் நாகராஜிடம் "இதுவரைக்கும் எத்தனை கொள்ளை அடிச்சிருக்கே" என்று கேட்டனர். அதற்கு நாகராஜ், "கொள்ளை எல்லாம் அடிக்க மாட்டேன் சார்.. வெட்டுவேன்.." என்றார் அசால் "வெட்டுவியா.. எத்தனை பேர் வெட்டியிருக்கே" என கேட்டதற்கு, "ஒரு நாலஞ்சு பேரை வெட்டியிருக்கேன்" என்றார் கூலாக. "எந்த ஊர்ல வெட்டியிருக்கே" என்று போலீசார் கேட்க, "வியாசர் பாடி" என்றார் இளைஞர்.

பறிமுதல்
நாகராஜ் ஓட்டி வந்த பைக் கூட திருடிட்டு வந்த பைக்தானாம்.. இதையடுத்து அவரிடமிருந்து பைக், பட்டாக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, கொடுங்கையூர் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications