சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டிரஸ்ஸுக்குள்".. நிர்மலாவின் கேடித்தனம்.. பயங்கர கில்லாடி போல.. ஷாக்காகி போன சென்னை போலீஸ்!

சென்னையில் சேலைகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

சென்னை: நிர்மலாவுக்கு எதுக்கு இந்த வேலை? ஆந்திராவில் இருந்து கிளம்பி வந்து, கில்லாடித்தனம் செய்து இங்கே சென்னையில் கைதாகி உள்ளார்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது.. அதனால் எல்லா கடைவீதிகளிலும் கூட்ட நெரிசல் நிரம்பி வழிகிறது.. இந்த நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் என்றாலும், போலீசா எல்லா இடங்களிலும் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வருகின்றனர்.. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Young woman arrested in theft case near Chennai

அவசர எண்களை ஆங்காங்கே வைத்து, விழிப்புணர்வு வாசகங்களையும் எழுதி மாட்டி வைத்துள்ளனர்.. இதைதவிர எல்லா அறிவுரைகளையும் பொதுமக்களுக்கு சொல்லி கொண்டே இருக்கின்றனர்.

இவ்வளவு இருந்தும், ஒரு பெண் தைரியமாக கைவரிசையை காட்டி உள்ளார்.. சென்னை வண்ணாரப்பேட்டையில் வீராஸ் என்ற துணிக்கடை செயல்பட்டு வருகிறது... இது இந்த பகுதியில் ரொம்ப ஃபேமஸ் ஆன கடை என்பதால், கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.. அப்போதுதான் ஒரு பெண் இங்குமங்கும் நடமாடி கொண்டே இருந்தார்.

ஒருவரை ஒருவரை முண்டியடித்து கொண்டிருந்ததால், அந்த பெண்ணும் அவர்களை சேர்த்து தள்ளி கொண்டு கடைக்குள் சுற்றி வந்து கொண்டிருந்தார். அந்த சமயம் கடையில் இருந்த சிசிடிவி கேமிராவை கடை ஊழியர்கள் கண்காணித்து கொண்டிருந்தனர்.. அப்போது இந்த பெண், புது புடவையை எடுத்து, தன்னுடைய சேலைக்குள் மறைத்து திணித்து கொண்டிருந்தார்.

அதை பார்த்த ஊழியர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை சுற்றி வளைத்தனர்.. பிறகு சேலைக்குள் திணித்த சேலையை பறிமுதல் செய்தனர்.. அந்த சேலை காஸ்ட்லியான சேலையாம்.. பிடிபட்ட பெண்ணை வண்ணாரப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.. அவரிடம் விசாரித்தபோது, ஆந்திராவை சேர்ந்தவராம்.. பெயர் நிர்மலா என்பது தெரியவந்தது.

அதுமட்டுமல்ல, தி.நகர் சரவணா ஸ்டோர், போன்ற பெரிய பெரிய கடைகளில் இதற்கு முன்பு பல புடவைகளை திருடியது இதே நிர்மலாதான் என்பதும் தெரியவந்தது.. இப்போது நிர்மலா ஜெயிலில்!

English summary
Young woman arrested in theft case near Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X