"நீ தொடாதே.. ஆம்பளை போலீஸ்தான் தொட வேண்டும்".. அழிச்சாட்டியம் செய்த தனலட்சுமி.. ஸ்தம்பித்த பீச் ரோடு
சென்னை: போதையில் நடுரோட்டில் உருண்டு பிரண்டு, போலீஸாரை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிய தனலட்சுமி என்ற பெண்ணால், பீச் ரோடே ஒருவழியாகிவிட்டது.
சென்னை மெரினா பீச் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.. விடிகாலையில் இருந்தே பிஸியாக இருக்கும்.. இந்த கடற்கரை சாலையில் நடைபாதையில் நிறைய பேர் வசித்து வருகிறார்கள்.. இவர்களில் ஒருவர்தான் தனலட்சுமி..
காலையிலேயே கஞ்சா சாப்பிட்டுவிட்டாரா? அல்லது நைட் சாப்பிட்ட கஞ்சாவா என தெரியவில்லை.. போதையில் சக நடைபாதைவாசிகளிடம் தகராறில் ஈடுபட்டார்..

தனலட்சுமி
ஒருகட்டத்தில் அந்த தகராறு முற்றிவிட்டது.. தனலட்சுமி சாலையில் உருண்டு பிரண்டும் சண்டை போட ஆரம்பித்தார். இதையடுத்து பாதுகாப்பு போலீசார் அங்கு சென்ற, தனலட்சுமியை அங்கிருந்து நகர்ந்து செல்லும்படி கூறினர்.. ஆனால் போலீசாரை பார்த்ததும் தனலட்சுமி ஆபாசமான செய்கைகளை காட்டி, அசிங்க அசிங்கமாக பேச ஆரம்பித்தார்..

ஆண் போலீஸ்
இதனால், ஒரு பெண் போலீஸ் தனலட்சுமியை அங்கிருந்து அப்புறப்படுத்த முன்வந்தார்.. ஆனால், அவரை பார்த்ததுமே தனலட்சுமி கொந்தளித்து விட்டார்.. "நீ என்னை தொடாதே.. ஆம்பளை போலீஸ்தான் என்னை தொட வேண்டும்" என்று ரகளை செய்தார். இதனால் பெண் போலீஸ் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிபோய் நின்றார்..

சமாதானம்
பிறகு ஒருவழியாக சமாதானப்படுத்தி நடுரோட்டில் இருந்து இழுத்து வந்து சாலையோரம் உட்கார வைத்தனர்.. அப்போது உட்கார்ந்து கொண்டே டான்ஸ் ஆடினார் தனலட்சுமி... ஆனால், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மறுபடியும் சாலையின் நடுவில், அதாவது பஸ் குறுக்கே வந்து நின்று கொண்டு பரதநாட்டியம் ஆடினார்.. திரும்பவும் அவரை நடைபாதைக்கு அழைத்து கொண்டு போனார்கள் போலீஸார்..

பஞ்சு
அந்த நேரம் பார்த்து ஒரு ஆம்புலன்ஸ் வந்தது.. அந்த ஆம்புலன்ஸை நிறுத்தி, தனலட்சுமிக்கு போதையை தெளிவிக்க போலீசார் முடிவு செய்தனர்.. அதற்காக பஞ்சை எடுத்து ஒரு திரவத்தில் நனைத்து மூக்கில் தடவ முயன்றனர்.. அந்த பஞ்சை பிடுங்கி கொண்ட தனலட்சுமி, தன்னுடைய உடம்பெல்லாம் தேய்த்து கொண்டு, ஆம்புலன்ஸ் டிரைவரை கெட்ட வார்த்தையால் திட்ட ஆரம்பித்தார்..

ஆம்புலன்ஸ்
பிறகு எல்லாரும் சேர்ந்து அந்த ஆம்புலன்ஸில் தனலட்சுமியை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.. ஆனால், ஆஸ்பத்திரி போகும்வரை தனலட்சுமி சும்மா இல்லை.. ஆம்புலன்ஸில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து கையில் வைத்து கொண்டு ஆட்டம் காட்டினார்.. அதை பிடுங்கி வைக்க போலீசார் படாதபாடு பட்டுள்ளனர்..தனலட்சுமியை ஒருவழியாக ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications