சென்னை லாட்ஜில் தோழியுடன் தங்கி மதுவில் மயங்கிய தொழிலதிபர்.. விடிந்ததும் காத்திருந்த பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தோழியுடன் தங்கியிருந்த தொழில் அதிபருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் அரங்கேறியுள்ளது. தோழியுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு போதையில் தூங்கிய தொழில் அதிபரின் 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் விஷயம் தெரிந்ததும், இது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தீபிகா என்ற அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

சென்னை ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த தொழில் அதிபர் மணி (வயது 47). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் பிரபல நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். அப்போது அவருடன் தோழி தீபிகா என்ற 24 வயது பெண்ணும் உடன் தங்கியிருந்தார்.

young-woman-flees-with-jewelry-after-staying-in-chennai-lodge-with-male-friend
Photo Credit:

கண்விழித்த போது காணவில்லை

நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த மணி, தனது தோழி தீபிகாவுடன் மது அருந்தியிருக்கிறார். தொடர்ந்து மணி தூங்கிவிட்டார். காலையில் கண் விழித்து பார்த்த போது, தனது கழுத்தில் கிடந்த தங்கச் செயின் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே திடுக்கிட்டு எழுந்த அவர் இது பற்றி தோழி தீபிகாவிடம் கேட்க அவரை அழைத்தார். ஆனால் அவரையும் காணவில்லை.

10 பவுன் தங்கச் சங்கிலி என்பதால் தீபிகா தான் எடுத்துக்கொண்டு தலைமறைவு ஆகியிருக்கக் கூடும் என்று சந்தேகமடைந்த தொழில் அதிபர் மணி, இதுதொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சபரிதாசன் இந்த வழக்கை விசாரித்தார்.

பல ஆண்களிடம் கைவரிசை?

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மணியின் தோழியான தீபிகாதான் 10 பவுன் தங்க நகையை திருடி சென்றதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார் தீபிகாவை அதிரடியாக கைது செய்தனர். இதில் தீபிகாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்ல என்பது, பல ஆண்களுடன் பழக்கம் வைத்திருப்பதும் தெரியவந்தது.

சென்னை பெருநகர மாநகராட்சியில் தான் அவரது தந்தை ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ஆனால் தீபிகா குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். குன்றத்தூரில் வசித்து வரும் தீபிகாவுக்கு பல ஆண் நண்பர்கள் உள்ளதாகவும், இதில் ஒருவர் தான் தொழில் அதிபர் மணி என்றும் கூறப்படுகிறது. ஆசையாக பேசி தனியாக வரவழைத்து பின்னர் அவர்களிடம் இருந்து பணம், நகைகளை பறிப்பதை வாடிக்கையாக கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் தீபிகாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது அவர் தொழில் அதிபர் மணியிடம் திருடிய 10 பவுன் தங்க சங்கிலியை விற்றுவிட்டதாக கூறினார். அவர் கூறிய தகவலின்படி தங்க நகையை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+