போய்ட்டு வர்றேன்.. மனைவியிடம் சொல்லிட்டு கிளம்பிய கணவர்..கத்தியால் வெட்டிய மர்ம நபர்.. ஆணவ கொலையா?
சென்னையில் இளைஞர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்
சென்னை: "போய்ட்டு வரேன்ம்மா" என்று மனைவியிடம் சொல்லிவிட்டுதான் வேலைக்கு கிளம்பினார் கணவர் முரளி.. ஆனால், டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்தவரை மர்ம நபர் கத்தியால் அறுத்துவிட்டு சென்றுள்ள சம்பவம் சென்னை மக்களை உறைய வைத்துள்ளது.
சென்னை செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் முரளி. தனியார் மருந்து விற்பனை நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.. அதே பகுதியில் வசித்து வந்த வந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்தார்.
இருவரும் வேறு வேறு சமூகம்.. முரளி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், பெண் வீட்டில் ஏற்று கொள்ளவில்லை. ஆனால் காதலர்கள் 6 மாசத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டனர்.

முரளி
கல்யாணம் ஆனதில் இருந்தே இருவீட்டிலும் பிரச்சனை நடந்து வந்துள்ளது.. சோழிங்கநல்லூர் போலீஸ் ஸ்டேஷனிலும் பேசி தீர்வு காணப்பட்டது. அதனால் ஒரு கட்டத்தில் கவுசல்யா வீட்டில் முரளியை ஏற்று கொண்டதாகவும் தெரிகிறது.

டீ கடை
இந்த நிலையில், வழக்கம் போல் மனைவியிடம் சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பி வந்துள்ளார் முரளி. காரப்பாக்கத்தில்தான் இவருக்கு ஆபீஸ்.. அதனால் ஆபீசுக்குள் நுழைவதற்கு முன்பு, எதிரில் இருக்கும் டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.

மர்ம நபர்
அப்போது பைக்கில் ஒரு மர்ம நபர் வந்துள்ளார், ஒரு நிமிஷம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி முரளியை அழைத்தும் சென்றுள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முரளியின் கழுத்தை அறுத்து சாய்த்த அந்நபர், பைக்கை எடுத்து கொண்டு பறந்தார். ரத்த வெள்ளத்தில் முரளி உயிருக்கு போராடியதை கண்டு, துடிதுடித்த மக்கள் உடனே பக்கத்தில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே முரளியின் உயிர் பிரிந்தது.

ஆணவ கொலையா?
தகவலறிந்து கண்ணகி நகர் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஆணவ கொலை என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. ஏனெனில் முரளியை பெண் வீட்டில் ஏற்று கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. மேலும் பைக்கில் வந்த மர்மநபர் யார் என்று தெரியவில்லை. ஆனால் பைக்கில் வந்து சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளதால், அதை கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இதைதவிர முரளியின் செல்போனை கொண்டும் ஆய்வு நடந்து வருகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications