காதலியைக் கத்தியால் குத்திவிட்டு.. தற்கொலைக்கு முயன்ற காதலன்.. தரமணியில் ஷாக் சம்பவம்
சென்னை: தரமணி அருகே வீடு புகுந்து காதலியைக் கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை முயன்ற காதலனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த இருவரையும் மீட்ட போலீசார் இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை தரமணி, கானகம், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர்கள் அருள்- விஜி, இவர்களது மகள் அர்ச்சனா (22). இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அஜித் (26) என்ற இளைஞரைக் காதலித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு அஜித் குடிபோதைக்கு அடிமையானவர் என்பதால் அர்ச்சனாவின் வீட்டில் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அஜித், இன்று மாலை தனது காதலி அர்ச்சனா வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கிருந்த கத்தியால் காதலியின் கழுத்தில் குத்தியுள்ளார். மேலும் தாடையிலும் குத்தி கிழித்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசாரிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அஜித் காதலியின் வீட்டுகுள் சென்று உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார, இருவரையும் மீட்டு இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தரமணி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
-
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications