Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடியோவில் இருப்பான்..சர்ச்சையில் இர்பான்! தொப்புள் கொடி வீடியோ சிக்கல்.. வருத்தம் தெரிவித்து கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை யூடியூபில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார் பிரபல யூட்யூபரான இர்பான். இந்த நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மருத்துவத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், உள்நோக்கத்துடன் தான் அவ்வாறு செய்யவில்லை என கடிதத்தில் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல யூட்யூபரான இர்பானின் மனைவிக்கு, கடந்த ஜூலை மாதம் தனியார் மருத்துவமனையில் பிரசவம் ஆகியிருக்கிறது. குழந்தை பிறந்த நிலையில், அதுகுறித்து இர்பான் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த குழந்தையின் பாலினத்தை அறிவித்துதான் இர்பான் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

irfan youtube health dept

இந்த நிலையில் அவரது யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோ வெளியானது. அதில் கருவுற்ற தனது மனைவியுடன் இர்பான் பேசுவது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, அறுவை சிகிச்சைக்கு தயாராவது, பிரசவம் நடைபெற்றது என பல்வேறு காட்சிகள் இருந்தன.

இந்த நிலையில் வீடியோவில் 11வது நிமிடத்தில் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் கத்தரிக்கோலால் வெட்டுவது போன்ற காட்சிகள் இருந்தது. இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்தது. அரசு பதிவு பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அரங்குக்குள் செல்ல வேண்டும். மேலும் கத்தரிக்கோல் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவர்கள் மட்டுமே கையாள வேண்டும். ஆனால் குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியது சட்டப்படி தவறு என மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை பறந்தது.

இதனையடுத்து தமிழ்நாடு மருத்துவ துறை அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூட்யூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது. தொடர்ந்து தானாகவே முன்வந்து யூட்யூபர் இர்பான் அந்த வீடியோவை நீக்கிவிட்டார். இதற்கிடையே இர்பான் மற்றும் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க முடிவு செய்திருப்பதாக சுகாதாரத் துறையினர் கூறினர். இர்பான் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறியிருந்தனர். மேலும், இர்பான் தப்பிக்க முடியாது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கூறியிருந்தார்.

மேலும், இர்பான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சர்ச்சையில் சிக்கிய மருத்துவமனை 10 நாட்கள் மருத்துவம் பார்க்க சுகாதார துறை அதிரடியாக தடை விதித்தது. மேலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கவும் புதிதாக யாரையும் சிகிச்சைக்கு அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. மேலும் அந்த மருத்துவமனைக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே இர்பான் மீது எந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்? என தெளிவுபடுத்தும் படி ஊரக நலப் பணிகள் இயக்குனரகத்திற்கு செம்மஞ்சேரி போலீசார் கடிதம் எழுதினர். இந்த நிலையில் இர்பான் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து அவர் கைதாகலாம் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்தபடியே தனது வீடியோவுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் இர்பான். தற்போது அவர் வெளிநாட்டில் இருப்பதால் நேரில் வர இயலவில்லை எனவும், உதவியாளர் மூலம் தனது தரப்பு வருத்தத்தை தமிழ்நாடு மருத்துவ மற்றும் சுகாதாரத் துறைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எந்த உள்நோக்கத்துடன் வீடியோவை பதிவு செய்யவில்லை என்றும், மருத்துவ சட்டங்களை தான் மதிப்பதாகவும் இர்பான் கூறி இருக்கிறார். மேலும் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் நேரில் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் இர்பான் கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+