யூடியூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.. இனி ஓராண்டுக்கு ஜாமீன் கிடைக்காது!
சென்னை: ஆன்லைன் விளையாட்டில் யூடியூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
Recommended Video
யூடியூபர் மதன் ஆன்லைன் விளையாட்டான பப்ஜி விளையாட்டை விளையாடிய போது சிறுமிகள் பெண்களிடம் ஆபாசமாக பேசியதாக பப்ஜி மதனை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் தருமபுரியில் கடந்த 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஒரு லாட்ஜில் ஒளிந்து கொண்டிருந்த போது அவர் பிடிபட்டார்.

போலீஸாரிடம் கெஞ்சல்
அப்போது தன்னை விட்டுவிடும்படி போலீஸார் காலில் விழுந்து பப்ஜி மதன் கெஞ்சியதாக ஒரு தகவல் கிடைத்தது. இதனிடையே இவர் தலைமறைவாக இருந்த போது பப்ஜி மதனுக்கு உடந்தையாக குரலை மாற்றி ஆபாசமாக பேசியதாக மனைவி கிருத்திகாவையும் போலீஸார் கைது செய்தனர்.

7 லட்சம் வருமானம்
இவர் யூடியூப் மூலம் ஆபாசமாக பேசியதில் வருமானமாக மாதத்திற்கு ரூ 7 லட்சம் வந்ததாம். இதை வைத்து இரு சொகுசு கார்கள் மற்றும் பங்களாக்களையும் அவர் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 4 கோடி முடக்கம் செய்யப்பட்டது.

ஓராண்டுக்கு ஜாமீன் கிடைக்காது
இந்த நிலையில் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால் ஓராண்டுக்கு சிறையிலிருந்து வெளியே வர முடியாது. ஜாமீனும் கிடைக்காது.

ராஜகோபாலன்
இவரை போல் மறைந்த தலைவர்களை அவதூறாக பேசியதாக கிஷோர் கே சாமியும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனும் குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். கிஷோர் கே சாமியும் பத்மசேஷாத்ரியில் படித்தவர். இந்த விவகாரத்தில் ஆசிரியரும் முன்னாள் மாணவரும் ஒரே நாளில் குண்டாஸில் கைதாகினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications