சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடை நீரையும் மலத்தையும் வீசிய மர்ம நபர்கள்! கீழ்ப்பாக்கத்தில் பரபரப்பு
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது வீட்டில் கழிவு நீர் போன்றவற்றை ஊற்றி வீட்டை சூறையாடியதால் பரபரப்பு எழுந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு உள்ளது. இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்மநபர்கள் சிலர், தூய்மை பணியாளரை சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக கண்டனம் தெரிவித்து கழிவு நீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியதாக சொல்லப்படுகிறது.

அவரது வீட்டையும் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தனது வீட்டை இன்று காலை 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதாரகவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் பதிவு
இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: இன்று காலை 9.30 மணி முதல் துப்புரவு தொழிலாளர்கள் என கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் என் வீட்டின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளன.
தாக்குதல் நடத்தியவர்கள் என் தாயாரின் போனை பிடுங்கி வீடியோ காலில் பேசியபோது பதிவு செய்தது.
— Savukku Shankar (@SavukkuOfficial) March 24, 2025
இப்போது மணி 11.43. இந்தத் தருணம் வரை தாக்குதல் நடத்த வந்தவர்கள் அதே இடத்தில் இருக்கின்றனர். காவல்துறையினர் என்னை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர். @CMOTamilnadu pic.twitter.com/yv5J1PiPm1
5 நிமிடங்களில்
நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்திற்கெல்லாம் இந்த கும்பல் எங்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை இடங்களிலும் அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடை நீரையும் மலத்தையும் கொட்டினர்.
தாயாருக்கு போன் செய்தேன்
என்ன நடந்தது என என் தாயாருக்கு போன் செய்த போது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து காவல் கட்டுப்பாடு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர்.
கொலை மிரட்டல்
9.30 மணி முதல் என் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்கள் நகரவே இல்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் நடைபெறுகிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை என அந்த பதிவில் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்
திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு.
— K.Annamalai (@annamalai_k) March 24, 2025
திமுக அரசு ஊழல்… https://t.co/9jlkWhGsQi
இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு.
வன்முறை
திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது.
அராஜகப் போக்கு
ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது பதிவில் கூறியிருப்பதாவது: திராவிட மாடல் என்ற பெயரில் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் இந்த போலி திராவிட மாடல் திமுக அரசிற்கு எதிராக, அவர்கள் செய்யும் ஊழலையும், முறைகேடுகளையும் பொதுவெளியில் அம்பலப்படுத்துவோர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் இந்த அராஜகப் போக்கை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
எல்.முருகன் கண்டனம்
இந்த திமுக ஆட்சியில், அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து நடத்தி வரும் ஊழலை, தொடர்ந்து தனது சவுக்கு மீடியா @Savukkumedia மூலமாக வெளிக் கொணர்ந்து வருகின்ற திரு. @SavukkuOfficial அவர்களது இல்லத்தில், அவர் இல்லாத சமயம் பார்த்து அத்துமீறி நுழைந்திருக்கும் கும்பல் மீது, காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அப்பட்டமான பழிவாங்கல் செயலாகும்.
ஜனநாயக ஆட்சியா
இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அறிக்கை விடும் தமிழக முதல்வர் @mkstalin அவர்கள், தன்னுடைய ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் இந்த பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா? இதுதான் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் ஜனநாயக ஆட்சியா?
கண்டனம்
இன்று திரு.சவுக்கு சங்கர் மீதும், அவரது தாயார் மீதும் வன்முறையை ஏவி விட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
-
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications