கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பதி தொகுதி எம்பி துர்கா பிரசாத் ராவ் சென்னையில் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதி லோக்சபா எம்பி துர்கா பிரசாத் ராவ் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.. ஆந்திராவை ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பியான இவர் சென்னையில் சிகிச்சை பலன் இன்றி பலியானார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் திருப்பதி லோக்சா எம்.பி. பள்ளி துர்கா பிரசாத், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த வசந்தகுமார் எம்பி அண்மையில் பலியான நிலையில் தற்போது துர்கா பிரசாத் பலியாகி உள்ளார்.

YSR Congress MP from Tirupati Balli Durga Prasad Dies of Covid-19

இந்தியாவில் தற்போது 50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 90,123 புதியவை ஆகும். அத்துடன் 1,290 பேர் ஒரே நாளில் இந்தியாவில் இறந்துள்ளனர். துர்கா பிரசாத் இறந்த அந்த நாளில் தான் இந்தியா இதுவரை இல்லாத அளவில் உயிரிழப்பை சந்தித்துள்ளது. பாதிப்பும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஆந்திராவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 8835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆந்திராவில் கொரோனாவால் 592760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கொரோனாவால் இதுவரை 5105 பேர் பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+