"0 + 0 பூஜ்ஜியம்தான்.. ராஜ்ஜியம் கிடைக்காது" பாஜக, அதிமுகவை சரமாரியாக வெளுத்த ஸ்டாலின்!
சென்னை: "தேர்தல் சீசன் என்பதால் இனி அடிக்கடி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவார். பிரதமர் மோடியின் வருகையால் NDA கூட்டணி தோல்வி அடையும். அதிமுக என்கிற மூழ்குகிற கப்பலை நம்பி பாஜக இருக்கிறது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால், பூஜ்ஜியம்தான்; ராஜ்ஜியம் கிடைக்காது" என்று பேசியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களை வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "தமிழ்நாட்டை அனைத்து வகைகளிலும் தாழ்த்தி வீழ்த்த பாஜக நினைக்கிறது. வளர்ச்சி அடையக்கூடிய மாநிலங்களில் பாஜக இருக்காது. பாஜக இருந்தால் வளர்ச்சி இருக்காது. அண்மையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, இந்தியா முழுக்க கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மகாராஷ்டிரத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து. மணிப்பூர் இன்றும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
அசாமில் இன்னும் மோசம். அம்மாநில முதல்வர் தன் பொறுப்பு மற்றும் மாண்பை மறந்து, முஸ்லிம்கள் மீது வெளிப்படையாக வெறுப்பைக் கக்குகிறார். பிகாரில் பள்ளிகள் அருகே இறைச்சிக் கடைகள் இருந்தால், அகற்றுவோம் என்று மாநில துணை முதல்வர் பேசுகிறார். இப்படியொரு நிலைமையை தமிழ்நாட்டில் கட்டமைக்கத்தான் அவர்கள் தவியாய்த் தவிக்கின்றனர். ஆனால், நமது திராவிட மாடல் அரசில் மத நல்லிணக்கமும் ஒற்றுமையும் பேணப்படுகிறது.
வக்ஃபு திருத்தச் சட்டம், சிஏஏ-வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர்; பெரும்பான்மையினர் சகோதரத்துவத்துடன் இருக்கின்றனர். அனைவரும் சமமாக நடத்தப்படுகின்றனர். வரலாற்றிலேயே இல்லாத எண்ணிக்கையாக 4,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம்.
தேர்தல் சீசன் என்பதால் இனி அடிக்கடி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவார். பிரதமர் மோடியின் வருகையால் NDA கூட்டணி தோல்வி அடையும். பாஜகவிடம் வெளிப்படையாகவே கேட்கிறேன். நீங்கள் எப்போதுதான் வன்முறையை விட்டுவிட்டு வளர்ச்சியைப் பற்றி பேசுவீர்கள்? எப்போது வெறுப்பையும் பிரிவினையையும் விதைப்பதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டுக்கான நல்ல விஷயங்களை பேசுவீர்கள்?
தமிழ்நாட்டைக் குறைசொல்லிப் பேசுவதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறதா? நீங்கள் ஆளக்கூடிய எந்த மாநிலம், தமிழ்நாட்டைவிட சிறப்பாக ஆளப்படுகிறது? தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் எப்போது முடிவுக்கு வரும்?
இதைத் தீர்த்து வைப்பதாகத்தானே 12 ஆண்டுகளுக்குமுன் ஆட்சிக்கு வந்தீர்கள்? வெளியுறவுத் துறையும் கடற்படையும் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? இவர்களுக்குக் கிடைத்த சரியான ஆள்தான் எடப்பாடி பழனிசாமி. ஒருவர் நாட்டு மக்கள் எல்லோருக்கும் ரூ. 15 லட்சம் தருவதாக வடை சுட்ட மாதிரி, பழனிசாமியும் இப்போது வெரைட்டி வெரைட்டியாக வடை சுடுகிறார். இந்த வடைகளை எல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை.
பாஜக டப்பா என்ஜினை நம்பி அதிமுக இருக்கிறது. அதிமுக என்கிற மூழ்குகிற கப்பலை நம்பி பாஜக இருக்கிறது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால், பூஜ்ஜியம்தான். ராஜ்ஜியம் கிடைக்காது" என்று பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications