Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடுப்பூசி போடுவதற்கும்..ஆட்டிசத்திற்கு தொடர்பு? வேக்சின் பற்றி ஸ்ரீதர் வேம்பு சர்ச்சை..எழுந்த விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தடுப்பூசிக்கு எதிராக வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவரின் போஸ்டுக்கு கடுமையான எதிர்ப்பு அலை நிலவி வருகிறது.

Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட போஸ்டில், பெற்றோர்கள் நான் இங்கே கொடுத்துள்ள ஆய்வு முடிவுகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிய குழந்தைகளுக்கு நாம் அதிகப்படியான தடுப்பூசிகள் கொடுத்து வருகிறோம். நாம் அதிகப்படியாக வேக்சின் கொடுப்பதற்கான சான்றுகள் அதிகரித்து வருவதாக நான் நம்புகிறேன். இது இந்தியாவிலும் பரவி வருகிறது, இதே சூழலில் இந்தியாவில் ஆட்டிசம் வேகமாக அதிகரித்து வருவதைக் காண்கிறோம், என்று கூறி உள்ளார்.

Sridhar Vembu Zoho

மெக்கல்லக் ஃபவுண்டேஷன் (McCullough Foundation) வெளியிட்ட ஆய்வு ஒன்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த ஆய்வு, 300-க்கும் மேற்பட்ட முடிவுகளைஆய்வு செய்ததாகவும், குழந்தை பருவ தடுப்பூசிகள் ஆட்டிசத்திற்கு ஒரு முக்கிய ஆபத்து காரணி என்றும் கூறியுள்ளது.

பீட்டர் மெக்கல்லக் மற்றும் ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட் இணைந்து எழுதிய இந்த ஃபவுண்டேஷனின் அறிக்கை, போலியான அறிவியல் கருத்துகளின் தொகுப்பாக உள்ளது. வேக்ஃபீல்ட், 1998 ஆம் ஆண்டில் லான்செட் மருத்துவ இதழில் வெளியிட்ட கட்டுரை திரும்பப் பெறப்பட்டது. எம்.எம்.ஆர் (தட்டம்மை, அம்மை, ரூபெல்லா) தடுப்பூசி மற்றும் ஆட்டிசம் இடையே தவறான தொடர்பை அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆய்வே தவறானது என்று பின்பு கண்டறியப்பட்டது.

இந்தத் தகவல் பொய் என்று நிரூபிக்கப்பட்டது. உலகெங்கிலும் பல உயிர்களை இந்த கட்டுரை பலி கொண்டது என்றும் விமர்சனங்களை சந்தித்தது.

ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

இது தொடர்பாக ஸ்ரீதர் வேம்பு அளித்த விளக்கத்தில், நான் டாக்டர் ஆண்டி வேக்ஃபீல்டை சந்தித்துள்ளேன், அவர் ஒரு மோசடி செய்பவர் அல்ல. டாக்டர் வேக்ஃபீல்டை மதிக்கும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை எண்ணி வருந்தும் சிறந்த ஆராய்ச்சி அனுபவம் கொண்ட பல மருத்துவர்களை எனக்குத் தெரியும். மருத்துவ அமைப்பு ஆபத்தான முறையில் தவறான பாதையில் செல்வதாக அவர்கள் தீவிரமாக கேள்வி எழுப்புகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் கோவிட் தடுப்பூசிகள் பிரபலமற்றுப் போய்விட்டன. டாக்டர் மெக்கல்லக் இதனை முன்கூட்டியே கணித்து அதற்கான விலையை செலுத்தினார். இந்த மருத்துவர்கள் மோசடி செய்பவர்கள் அல்ல. அவர்கள் துணிச்சலான வீரர்கள், நமது நன்றியை அவர்கள் பெற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

வேம்பு தடுப்பூசிக்கு எதிராக வெளியிட்ட பதிவு

அவரது பதிவுகள் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை தூண்டியுள்ளன. வேம்பு அறிவியலுக்கு எதிராக பேசுகிறார். அவர் சர்ச்சைக்குரிய மூட நம்பிக்கையை பரப்ப நினைக்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. வேம்பு தடுப்பூசிக்கு எதிராக வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவரின் போஸ்டுக்கு கடுமையான எதிர்ப்பு அலை நிலவி வருகிறது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு இதற்கு எதிராக செய்துள்ள போஸ்டில், ஸ்ரீதர் வேம்பு எனும் சனாதன நச்சுக்கிருமி!

குழந்தைகளுக்கு அதிகளவு தடுப்பூசிகள் கொடுக்கப்படுவதால் தான் ஆட்டிசம் பாதிப்பு வருகிறது என்று சொல்லி தடுப்பூசிக்கு எதிராக பரப்புரை செய்யும் அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் பதிவை பகிர்ந்துள்ள சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இந்த ஆய்வை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இளம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அதிகளவில் தரப்படுகின்றன. தடுப்பூசி போடும் நடைமுறை இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆட்டிசம் பாதிப்பும் அதிகரித்து வருகிறது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அறிவியலுக்கு எதிரான ஸ்ரீதர் வேம்புவின் பிற்போக்குத்தனமான கருத்துக்கு மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மூடநம்பிக்கைகளிலும் சடங்குகளிலும் பெரும்பான்மை மக்கள் மூழ்கியுள்ள இந்தியா போன்ற பழமைவாத நாட்டில், தடுப்பூசிகள் - அறிவியல் ஆய்வுகள் மூலம் கோடிக்கணக்கான மக்களை நோய் தொற்றுகளிலிருந்து குணமாக்கவும் - பாதுகாக்கவும் அரசுகள் போராடி வருகின்றன. இத்தகைய ஆபத்தான பிற்போக்கு கருத்துகள் நோய் தடுப்பு இயக்கத்திற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும்

பகுத்தறிவும், அறிவியல் மனப்பான்மையும் கொண்ட திராவிட இயக்க தலைவர்கள் தமிழ்நாட்டை வழிநடத்திய காரணத்தினால் தான் இன்று கல்வி - மருத்துவம் - சமூக - பொருளாதார காரணிகளில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.

இளம் தலைமுறையினர் மாடு மேய்க்க வேண்டும், 'எல்லோரும்' படித்து கிராமங்களை விட்டு வெளியேறியதால் தான் விவசாய கூலிக்கு ஆளில்லை என்று பேசும் நபர்களும், நவீன அறிவியலின் தாக்கத்தினால் பாரதத்தின் தர்மம் சீரழிவதாகவும், மாட்டு மூத்திரத்தில் நோய்கள் தீரும் என்றும் பேசி வரும் ஸ்ரீதர் வேம்பு போன்றவர்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர். இந்த கும்பலின் நச்சுக்கருத்தை கேட்டு யாரேனும் குழந்தைகளுக்கு அவசியமான தடுப்பூசிகளை செலுத்தத் தவறினால் ஏற்படும் விளைவுகளை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அறிவியலின் துணையால் கோடிக்கணக்கானோரின் பசிப்பிணி தீர்ந்துள்ளது. நவீன மருத்துவத்தால் நமது குழந்தைகளும் தாய்மார்களும் நலத்துடன் இருக்கின்றனர். உயர் சிகிக்கைகளால் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

ஸ்ரீதர் வேம்பு போன்ற சனாதன பிற்போக்குவாதிகளின் இத்தகைய ஆபத்தான போக்கை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அறிவியலுக்கு எதிராக பரப்புரை செய்யும் இம்மாதிரியான ஆசாமிகளை வெகு மக்கள் விரட்டி அடிக்க வேண்டும், என்று விமர்சனம் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+