கூகுளை பார்த்து குண்டு தயாரித்த டொமினிக்! கேரளா குண்டுவெடிப்பின் பின்புலம்.. அதிர வைக்கும் போலீஸார்
கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் கிறிஸ்துவ மதவழிபாட்டு கூட்டத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது டொமினிக் மார்டின்தான் என காவல் துறை தெரிவித்துள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்துவ மதவழிபாட்டு கூட்டரங்கில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் கேரளாவை உலுக்கியுள்ளது. இந்த நிலையில் கேரளா குண்டுவெடிப்பு குறித்து சம்பவ இடத்திற்கு சென்று என்ஐஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷஆ உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்புக்கு நான்தான் காரணம் என திருச்சூரை சேர்ந்த கொடக்காரா காவல் நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்துள்ளார். இவரை போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சரணடைவதற்கு முன்பு குண்டுவெடிப்பை நிகழ்த்திய நபர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: என் பெயர் மார்ட்டின், பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கச் செய்ததற்கு நான் பொறுப்பேற்கிறேன். நான் ஏன் இந்த செயலை செய்தேன் என்பதை விளக்கவே பேஸ்புக்கில் இந்த லைவ் வீடியோ பதிவேற்றம் செய்கிறேன்.
இந்த அமைப்பு போதனைகள் நாட்டுக்கு எதிரானது என்பதை நான் உணர்ந்தேன். தேசவிரோத செயல்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் மாறவில்லை. தொடர்ந்து எனக்கு பிடிக்காத போதனைகளை போதித்து வந்தனர். இதை நான் எதிர்க்கிறேன். குண்டுவெடிப்பை நிகழ்த்த நான் எப்படி திட்டமிட்டேன் என்பதை செய்தி சேனல்கள் மற்றும் சமூகவலைதளங்களில் ஒளிபரப்பக் கூடாது என்றார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் கேரளாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது டொமினிக்தான். கூகுளை பார்த்து குண்டு தயாரிப்பது குறித்து கற்றுக் கொண்டதாக டொமினிக் வாக்குமூலம் அளித்துள்ளார். 6 மாதங்களாக குண்டு தயாரிப்பது தொடர்பாக கூகுளில் டொமினிக் தேடினார். இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications