கேரளா குண்டுவெடிப்பு- 90% தீக்காயம் அடைந்த மேலும் ஒரு பெண் பலி.. இறந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்வு
கொச்சி: கேரளாவில் கிறிஸ்துவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
கொச்சியில் களமச்சேரியில் உள்ள கிறிஸ்துவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் காலை 9 மணிக்கு இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடிவிபத்துகள் நடந்தன.

இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமான வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தம்மனம் பகுதியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம் நான்தான் என கொடக்கராக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். முதல்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட மார்ட்டின் ரிமோட் செயலி முறையில் எல்இடி வகை வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்ச்சியுள்ளது உறுதியானது.
சரணடைவதற்கு முன் முகநூல் நேரலையில் தோன்றிய டொமினிக், கிறிஸ்துவ மதப்பிரிவினரிடம் வெறுப்பை தூண்டும் பேச்சுகளைத் தவிர்க்க பல முறை கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர்கள் அதை மறுத்ததால் குண்டுவெடிப்பை நிகழ்த்தினேன். இந்த குண்டுவெடிப்பில் நான் மட்டுமே செய்தேன், வேறு யாரும் உதவவில்லை.
அது போல் வெடிகுண்டு தயாரிக்க வெடிப்பொருள்களை கொச்சியிலிருந்து வாங்கினேன என கூறியிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண் ஒருவர் பலியாகிவிட்டார். இவர் தொடுபுழாவை சேர்ந்த குமாரி ஆவார். இவருக்கு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications