நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு.. ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் அவருடன் இருந்த 3 பேர் கைது!
கொச்சி: நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகியுள்ளார். கேரளாவில் பாரில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து ஐடி ஊழியர் காரில் கடத்தி தாக்கப்பட்ட வழக்கில் லட்சுமி மேனன் உடன் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் லட்சுமி மேனன் தலைமறைவாகியுள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அண்மையில் பார் ஒன்றில் தகராறு நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவரை காரில் கடத்திச் சென்று தாக்கி உள்ளனர். நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவருடன் இருந்த 3 பேர் சேர்ந்து, ஐடி ஊழியரை காரில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

பாரில் இரவு 11 மணியளவில் ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் தரப்புக்கும், லட்சுமி மேன தரப்புக்கும் இடையே இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனன் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதையடுத்து, தாக்கப்பட்ட ஐடி ஊழியர் அளித்த புகாரின் பேரில் லட்சுமி மேனனுடன் இருந்த மிதுன், அனீஷ் மற்றொரு பெண் ஆகிய 3 பேரை எர்ணாகுளம் வடக்கு போலீசார் கைது செய்துள்ளனர். லட்சுமி மேனனையும் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். நடிகை லட்சுமி மேனனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.
அவரை விசாரணைக்கு போலீசார் அழைக்க போன் செய்த நிலையில், லட்சுமி மேனன் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும், லட்சுமி மேனனுடன் இருந்த பெண் அளித்த புகாரில் எதிர் தரப்பைச் சேர்ந்த ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீசார், "நடிகை லட்சுமி மேன மற்றும் மூன்று பேர், ஐ.டி ஊழியர் ஷா சலீம் மற்றும் அவரது நண்பர்களின் காரைப் பின்தொடர்ந்து சென்று பாலத்தில் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் ஐ.டி ஊழிய ஷா சலீமை வலுக்கட்டாயமாக தங்கள் காரில் இழுத்துப்போட்டு வேகமாக அங்கிருந்து புறப்பட்டுள்ளர். காருக்குள் வைத்து அவரைத் தாக்கி உள்ளனர். பரவூரில் உள்ள வெடிமாரா சந்திப்பில் அவரை இறக்கி விடும் வரை அவர்கள் அவரை ரில் வைத்து கடுமையாக தாக்கினர்" என்று தெரிவித்துள்ளனர்.
2011ஆம் ஆண்டு வினயன் இயக்கிய 'ரகுவின் சொந்தம் ராசியா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதன் பிறகு தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து, தெலுங்கிலும் சில பட்னகளில் நடித்து வந்த லக்ஷ்மி, விஷாலுடன் 2 படங்களில் அடுத்தடுத்து நடித்தார். அதன் பிறகு வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.
27 வயதான லட்சுமி மேனன் தற்போது பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. இந்த ஆண்டு மார்ச்சில் வெளியான சப்தம் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். லட்சுமி மேனனை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications