காதலனுக்கு அடி உதை.. 16 வயது சிறுமியை சீரழித்து.. வீடியோ எடுத்து.. அதிர வைத்த கோவை மணிகண்டன்!
சிறுமியை சீரழித்தது குறித்து மணிகண்டன் வாக்குமூலம் தந்துள்ளார்
கோவை: காதலனை தாக்கிவிட்டு, புதர் மண்டிய மறைவான இடத்துக்கு அந்த பெண்ணை தூக்கி சென்று ஆடைகளை அகற்றி.. சீரழித்தோம்.. வீடியோ எடுத்தோம்" என்று கோவை சிறுமியை சீரழித்த 6 பேர் கொண்ட கும்பலின் தலைவன் மணிகண்டன் வாக்குமூலம் தந்துள்ளான்.
கோவை சீரநாயக்கன் பாளையத்தில் சிறுவர் பூங்கா உள்ளது.. இங்கு ஒரு காதல் ஜோடி போன 26ஆம் தேதி வந்துள்ளது. காதலி 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி.. அன்று அவளுக்கு பிறந்த நாள்.. அதனால் தனிமையில் பேச பார்க்கிற்கு இரவு 8 மணி அளவில் வந்துள்ளனர்.
அப்போது அங்கு திடீரென வந்த 6 இளைஞர்கள், காதலனை தாக்கிவிட்டு அந்த சிறுமியை பார்க்குக்கு பின்பக்கம் இருந்த ஒரு காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணின் ஆடைகளை மிரட்டி கழட்டி வீடியோ எடுத்ததுடன், அந்த பெண்ணையும் சீரழித்துள்ளனர்.

வீடியோ
இந்த 6 பேரில் மணிகண்டன் என்பவன்தான் முதலில் வன்கொடுமை செய்துள்ளான். ஒருவர் பெண்ணை சீரழிக்க, இன்னொருவர் வீடியோ எடுக்க, மற்றவர்கள் யாராவது வருகிறார்களா என காவல் காக்க.. என்று படுபாதக செயல் அந்த பகுதியில் அரங்கேறி உள்ளது. அது மட்டுமல்ல.. வீட்டுக்கு அனுப்பி வைக்கும்போது, "எங்களிடம் வீடியோ இருக்கு.. எப்ப கூப்பிட்டாலும் வரணும்" என்று சொல்லிதான் இவர்கள் அனுப்பி உள்ளனர்.

புகார்
இறுதியில் அந்த பெண் உருக்குலைந்த நிலையில் தன் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் சொல்லி கதற, அதிர்ந்த பெற்றோர், உடனடியாக ஆர்எஸ்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யவும், கார்த்தி, மணிகண்டன், ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயண மூர்த்தி ஆகியோரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

விசாரணை
முக்கிய குற்றவாளியான மணிகண்டன் போன வாரம், கோவை மகளிர் கோர்ட்டில் சரணடைந்தான். இதனையடுத்து மகிளா நீதிமன்ற நீதிபதி ராதிகா முன்பு சரணடைந்த மணிகண்டனை வருகின்ற 17 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனைத்து மகளிர் போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

வாக்குமூலம்
அதன்படி அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அப்போது மகளிர் போலீசாரிடம் மணிகண்டன் சொன்னதாவது: "நான் எப்பவுமே நைட் நேரத்தில், என் ஃபிரண்டுகளுடன் அடிக்கடி அந்த பார்க்குக்கு போவேன்.. அன்னைக்கும் அப்படித்தான் போனேன். இந்த காதல் ஜோடி மட்டும்தான் அந்த பார்க்கில் இருந்தனர்.. வேற யாருமே அங்கு இல்லை.

தாக்கினோம்
அந்த பெண்ணை இதற்கு முன்புகூட பலமுறை நான் பார்த்திருக்கிறேன்.. அதனால் அந்த காதலனை விரட்டிவிட்டு, அந்த பெண்ணிடம் பேச போனேன்.. இதை பார்த்து கோபமடைந்த காதலன், எங்களை தடுத்தார்.. வாக்குவாதமும் செய்தார். இது எங்களுக்கு எரிச்சலை தந்தது.. அதனால், நாங்கள் அவரை சரமாரியாக அடித்துவிட்டோம்.. அவரும் மயங்கி விழுந்துவிட்டார். உடனே அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை தந்து, அங்கிருந்து தப்பியோடி விட்டோம்" என்றார்.

வீடியோ
இதையடுத்து மணிகண்டனின் செல்போனில் மாணவியை சீரழித்த வீடியோ காட்சி, போட்டோக்களும் உள்ளதாக சொல்லப்படுகிறது.. இந்த வீடியோவை மணிகண்டன் வேறு யாருக்காவது ஷேர் செய்தாரா, இந்த பெண்ணை போலவே வேறு எந்த பெண்ணையாவது பாலியல் வன்கொடுமை செய்துள்ளாரா என்ற விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications