மீண்டும் ஒரு ‘பொள்ளாச்சி’ 16 வயதிலேயே கர்ப்பம்! காதலன்.. தாத்தா..மந்திரவாதி! நீண்ட பாட்டியலால் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

கோவை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியில் பல பெண்களை சீரழித்த கும்பலின் அட்டூழியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதே பொள்ளாச்சியில் மீண்டும் அதே மாதிரியான ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. 16 வயது சிறுமியிடம் ஒன்றல்ல இரண்டல்ல 4 பேர் அத்துமீறியதாக வெளியான தகவலால் போலீசாரே அதிர்ந்து போயுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சியில் நடந்தேறிய கொடூர பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பொள்ளாச்சியில் இளம் பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்தும், ஆபாசமாக மயக்கி எடுத்தும் அவா்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் பிடிபட்டது.

ஒரு பெண் கதறுவதைப் போல வீடியோ வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. பல ஆண்டுகள் விசாரணையில் இருந்து வரும் இந்த வழக்கின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதே போன்றதொரு சம்பவம் அங்கேயே அரங்கேறி இருக்கிறது.

பொள்ளாச்சி சம்பவம்

பொள்ளாச்சி சம்பவம்

பொள்ளாச்சி அருகே காதலனால் கர்ப்பமான 16 வயது சிறுமியை அவரது தாத்தா, மந்திரவாதி என ஒரு கும்பலே மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் சம்பவம் தான் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் படிப்பிற்காக அவரது பெற்றோர் அவருக்கு செல்போன் வாங்கித் தந்த நிலையில், முகநூல் இன்ஸ்டாகிராம் என இஷ்டத்திற்கு உலாவி வந்திருக்கிறார் அந்த சிறுமி.

இன்ஸ்டாகிராம் பழக்கம்

இன்ஸ்டாகிராம் பழக்கம்

அப்போது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 20 வயது இளைஞனுக்கும் அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி அந்த இளைஞர் சிறுமியிடம் சகஜமாக பழகி வாட்ஸ் ஆப் தொலைபேசி என பேசிவந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த சிறுமையை காதலிப்பதாக கூறியிருக்கிறார். வயது கோளாறு தன்னை சூழப் போகும் அந்த இருளை அறியாத அந்த சிறுமி அந்த இளைஞனை நம்பி இருக்கிறார். இதை அடுத்து சிறப்பு வகுப்புகளுக்கு செல்கிறேன் எனக் கூறி வீட்டில் இருந்து அடிக்கடி வெளியேறிய அந்த சிறுமி விக்னேஷை சந்தித்து பேசி இருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அவரை அடிக்கடி வெளியே அழைத்துச் சென்ற விக்னேஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த கொடூரம் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் நீடித்த நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியான விக்னேஷ் தனது காதலி கர்ப்பமானது குறித்து தனது தாத்தா முறை கொண்ட சின்னச்சாமி என்பவர் இடம் தெரிவித்திருக்கிறார். விவகாரம் பெரிதாகிவிடும் எனவே அந்த சிறுமியின் கருவை நான் கலைக்க முயற்சி செய்கிறேன் என கூறிய சின்னச்சாமி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றதோடு இதுகுறித்து வெளியே சொல்லி விடுவேன் எனக் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அத்துமீறிய மந்திரவாதி

அத்துமீறிய மந்திரவாதி

தான் அத்துமீறியது குறித்து விக்னேஷிடம் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியதோடு கருவை கலைப்பதாக கூறி சின்னச்சாமி 60 வயதான அர்ஜுனன் என்ற மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். இதை அடுத்து சிறுமிக்கு தோஷம் கழிக்கவும் கருவை கலைக்கவும் பூஜைகள் செய்ய வேண்டும் என்ற அர்ஜுனன் அந்தச் சிறுமியை தனியறையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இப்படி காதலன் முதல் மந்திரவாதி என அடுத்தடுத்து அத்துமீறியதை கண்டு ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாது என பொங்கி எழுந்த சிறுமி தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து விவரித்து அழுதுள்ளார்.

3 பேர் கைது

3 பேர் கைது

இதனால் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மந்திரவாதி அர்ஜுனன், காதலன் விக்னேஷ், விக்னேஷ் நண்பர் ஈஸ்வரன், விக்னேஷின் தாத்தா சின்னச்சாமி ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அர்ஜுனன் ஈஸ்வரன் சின்னச்சாமி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். தன்னை தேடுவதை அறிந்த விக்னேஷ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்யும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

போலீசார் அறிவுரை

போலீசார் அறிவுரை

எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிறு வயது காதலில் சிக்கி வாழ்வை தொலைக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதே நேரத்தில் வீட்டில் இருக்கும் சிறுமிகள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. அதை தவறவிட்டால் இதுபோன்ற விபரீதங்கள் அரங்கேறும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் என்கின்றனர் போலீசார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+