Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை மாநகராட்சியில் வீடு, மனை இருக்கா?.. சொத்து வரி செலுத்த சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட முக்கிய வரிகளை செலுத்தும் வகையில் சிறப்பு முகாம் இன்று, நாளை (மார்ச் 22, 23) பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது. எந்தெந்த பகுதிகளில் எல்லாம் இந்த முகாம் நடைபெறவுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கோவை மாநகராட்சிக்கு வருவாய் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் உள்ளிட்ட வரிகள்தான். இந்த வரிகள் மூலமாகத்தான் கோவை மாநகராட்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.

Coimbatore Corporation

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரிவசூல் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்.

சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்:- வார்டு எண் 5க்கு ரேசன் கடை விசுவாசபுரம், வார்டு எண் 6க்கு பத்ரகாளியம்மன் கோவில் வீரியம்பாளையம், வார்டு எண் 7, 8க்கு நேரு நகர் பேருந்து நிறுத்தம் அருகில், காளப்பட்டி, வார்டு எண் 51க்கு Society hall, சௌரிபாளையம் மாரியம்மன் கோவில் அருகில், வார்டு எண் 55 க்கு மாநகராட்சி பள்ளி, SIHS காலனி, வார்டு எண் 56க்கு சுங்கம் மைதானம். ஒண்டிப்புதூரிலும் முகாம் நடைபெறுகிறது.

வார்டு எண் 39க்கு பெருமாள் கோவில் சுண்டபாளையம். (2203-2025 சனிக்கிழமை மட்டும்), வார்டு எண் 74க்கு சமுதாய கூடம். பூசாரிபாளையம் (23-03-2025 ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 75க்கு மாரியம்மன் கோவில் மைதானம் சீரநாயக்கன்பாளையத்திலும், வார்டு எண் 11க்கு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, ஜனதா நகர், வார்டு எண் 15க்கு அங்கன்வாடி மையம். சுப்பிரமணியம் பாளையத்திலும் முகாம் நடைபெறுகிறது.

வார்டு எண் 19க்கு அம்மா உணவகம் மணியகாரம்பாளையம், வார்டு எண் 25க்கு அரசு உயர் நிலை பள்ளி, காந்திமாநகர் (Govt.High.school), வார்டு எண் 28க்கு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward office), வார்டு எண் 29க்கு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward office) டீச்சர்ஸ்காலனி, கணபதி, வார்டு எண் 86க்கு பிலால் நகர் கரும்புகடை (2203-2025 சனிக்கிழமை மட்டும் ), வார்டு எண் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward office), குனியமுத்தூரிலும் முகாம் நடைபெறுகிறது.

வார்டு எண் 88க்கு விநாயகர் கோவில் வீதி, குனியமுத்தூர். (2203-2025 சனிக்கிழமை மட்டும் ), வார்டு எண் 89க்கு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward office), சுண்டக்காமுத்தூர், வார்டு எண் 97க்கு ஹவுசிங் யூனிட் பேஸ்-2 பிள்ளையார்புரம். (23-03-2025 ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 98க்கு சாரதா மில் ரோடு. போத்தனூர் (23-03-2025 ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 32க்கு சிறுவர் பூங்கா, நாராயணசாமி வீதி, சங்கனூரிலும் முகாம் நடைபெறுகிறது.

வார்டு எண் 63க்கு பெருமாள் கோவில் வீதி, நியூ கலெக்ஷன் சென்டர், வார்டு எண் 80க்கு ஒக்கிலியர் காலனி ஸ்கூல், கெம்பட்டி காலனியிலும் இந்த வரி செலுத்தும் முகாம் நடைபெறவுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் மேற்கண்ட சிறப்பு வரிவசூல் முகாம்களும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22, 23) ஆகிய இரண்டு நாட்களிலும் வழக்கம்போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+