இங்கு சிறுநீர் கழித்தால் இதான் கதி.. கோவக்கார கோவை மக்கள்.. என்ன காரியம் செஞ்சிருக்காங்கனு பாருங்க
கோவை: கோவை, சிவானந்தா காலனி பகுதியில் தொடர்ந்து பொதுமக்கள் பலரும் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அப்பகுதியினர் நூதன எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் உள்ளதால் அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் கோவைக்கு படையெடுக்கின்றனர். இங்கு ஐடி பூங்காக்கள், தொழிற்சாலைகள், பெரும் கல்வி நிறுவனங்கள், விவசாயம் என வளர்ச்சி பெற்ற மாவட்டமாக கோவை உள்ளது.

மாவட்டத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கல்வி, மருத்துவம், தொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கோவை மாவட்டத்துக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் பெரிய பிரச்னையாக இருப்பது போக்குவரத்து பிரச்னையும், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்றவை தான்.
குளு குளு கோவை, சில்லென்ற கோவை என்று காலநிலைக்குப் பெயர்பெற்ற கோவை மாவட்டத்தில் சுகாதார சீர்கேடு தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. பொது இடங்களில் சுகாதாரம் என்பது மிகவும் அவசியமானதாகும். அரசு சார்பில் சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும் பல பகுதிகளில் பொதுமக்களின் அலட்சியத்தால் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற செயல்களில் எந்தவித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இப்பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கோவை சிவானந்தா காலனி பகுதி மக்கள் எடுத்துள்ள நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கோவை, சிவானந்தா காலனியில் இருந்து புதுப்பாலம் பகுதிக்கு செல்லும் வழி குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். ஆனால், அங்குள்ள சாலைகளில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மூச்சுக்கூட விட முடியாமல் மூக்கைப் பொத்திக் கொண்டு அப்பகுதியில் இருந்து ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனாலும், இவ்வழியாக செல்வோர் பலரும் இப்பகுதியிலே எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எவ்வளவு முறை எச்சரித்தாலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன.

வீட்டின் ஜன்னலைக் கூட திறந்து வைக்க முடியாது. சிறுநீர் நாற்றம் குப்பென்று வீசி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அரசு சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, இப்பிரச்னைக்கு எண்டு கார்டு போடும் வகையில் நாங்களே களத்தில் இறங்கி புது முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளோம்.
தடுப்புச் சுவர்களில் சிறுநீர் கழிக்காதவாறு சுவருக்கு முன்பு நீண்ட ஒயர் கட்டிவிட்டு அதில் செருப்பு, துடைப்பம் உள்ளிட்டவற்றை மாட்டி வைத்துள்ளோம். இங்கு சிறுநீர் கழித்தால் செருப்பு, துடைப்பத்தால் அடிக்கப்படும் என்று எச்சரிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதியின் சுகாதாரம், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications