கோவையில் அதிர்ச்சி.. 5 வருடமாக குடியிருந்த பெண் பார்த்த வேலை.. உரிமையாளர் மீது அருவாமனை தாக்குதல்
கோவை: கோவை மாவட்டம், சோமனூரில் வீட்டின் உரிமையாளரை அருவாமனையால் தாக்கி அவரது கழுத்தில் இருந்து நகையை வீட்டில் வாடகைக்கு இருந்த பெண் ஒருவர் பறிக்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் வீட்டின் உரிமையாளர் பலத்த காயமடைந்துள்ளார். நகைப் பறிப்பில் ஈடுபட முயன்ற சுதா என்பவரை காவல் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போர் பதற்றம், டிரம்ப் பதவியேற்பு என நாளுக்கு நாள் தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டு இருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 10 ஆயிரத்தை தாண்டி விடும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு சவரன் 73 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் நகை பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பள்ளிகளில் இருந்து பிள்ளைகளை அழைத்து வரும் தாய்மார்கள், பேருந்துகளில் செல்லும் பெண்கள், தனியாக சாலைகளில் நடந்து செல்லும் மூதாட்டிகளைக் குறிவைத்து நகைப் பறிப்புச் சம்பவங்கள் ஈடுபடுகின்றனர். இதனால், வெளியில் செல்லும் பெண்கள் தங்க நகை அணிவதற்கே அச்சப்படும் சூழல் ஏப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டம், சோமனூரில் வீட்டின் உரிமையாளரை அருவாமனையால் தாக்கி அவரது கழுத்தில் இருந்து நகையை வீட்டில் வாடகைக்கு இருந்த பெண் ஒருவர் பறிக்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் வீட்டின் உரிமையாளர் பலத்த காயமடைந்துள்ளார். நகைப் பறிப்பில் ஈடுபட முயன்ற சுதா என்பவரை காவல் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி சத்யபிரியா. சத்யபிரியாவின் தாயார் கலாமணியும் இவர்களுடன் வசித்து வருகிறார். இன்று காலையில் சத்திய பிரியா வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அவரது கணவர் ராமலிங்கமும், அம்மா கலாமணியும் வீட்டில் இருந்துள்ளனர்.
இவர்களது வீட்டின் மாடியில் உள்ள குடியிருப்பை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த வீட்டில் ஐந்து ஆண்டுகளாக சுதா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுதா, கலாமணியை அழைத்து தனது வீட்டின் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிவது போல இருப்பதாகவும், வந்து பார்க்குமாறும் கூறியுள்ளார். கலாமணியும் மாடிக்கு சென்று சமையல் அறையில் பார்த்துள்ளார்.
அப்போது, திடீரென கலாமணியின் வாயைப் பொத்திய சுதா, அவரது கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார். ஆனால், கலாமணி செயினை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளவே இருவரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருவாமனையை எடுத்து கலாமணியின் தலையில் சுதா தாக்கியுள்ளார். காயமடைந்த கலாமணி சத்தம் போடவே மருமகன் ராமலிங்கம் வந்து பார்த்துள்ளார்.
அப்போது, அருவாமனையால் தாக்கப்பட்ட தலையில் காயத்துடன் கலாமணி இருந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக கலாமணியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, ராமலிங்கம் இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் சுதாவை கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சுதாவிடம் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு உரிமையாளரிடமே வாடகைக்கு தங்கியிருந்த பெண் நகைப் பறிப்பில் ஈடுபட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications